பக்கம் எண் :

240
 

தேவர்கள் எறும்பு உருவம் எடுத்துப் பூசித்த காரணத்தால் எறும்பியூர் என்னும் பெயர் ஏற்பட்டது.

இறைவர் : எறும்பீசர்.

இறைவி : நறுங்குழல் நாயகி.

நைமிச முனிவர், பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

கோயில் மலைமேல் உள்ளது. இலிங்கமூர்த்தி வடபுறம் சாய்ந்திருக்கிறார்.

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் முதலானோர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளில் இறைவர், திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர் என்னும் திருப்பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளனர்1.

திருவெறும்பியூர் ஆழ்வார்க்கு ஸ்ரீ விமானம் எடுப்பித்தவன் சிறுதவூருடையான் வேளான் வீரநாராயணனான செம்பியன் வெய்தி வேளான் ஆவன். இவன் இக்கோயிலில் மூன்று சந்தியும் உடுக்கையும் தாளமுங் கொண்டு நால்வர் அடிகள்மார் திருப்பதிகம் பாடுவதற்கு நில நிவந்தம் அளித்திருந்தான்.

தென்கயிலாயத்து மகாதேவர்க்குத் திருவரங்க தேவரடியாள்


1 See the Annual Reports on the South Indian Epigraphy for the year 1892, No. 96-142.

See also the South Indian Inscriptions, Vol. XII.

See also The Cholas, No. 50, 51, 88, 110-114, 138-140, 162-166, 283, 286 and 287