சிதைக்கப்பட்டு விட்டன. அந்தந்த உருவங்களின் மேலே பொறிக்கப்பெற்ற பெயர்கள் இன்றும் உள்ளன. மேலக்கோபுரக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற செய்தியை இம்முதல் பிராகாரத்தின் மேற்குத் திருச்சுற்று மாளிகையின் உள்சுவரில் பொறிக்கப் பெற்றிருக்கும் "ஈசுவரளு* ஆவணிமீ* இந்தப் பிராகாரம் மருதுடையகத்தீச நயினார் புத்திரர் ஆனையப்பபிள்ளை, வயித்தியநாத அண்ணன்கள் புண்ணியம்" என்னும் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது. அச்சுதப்ப நாயக்கர் திருவரங்கம் பெரியகோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர். இரண்யகர்ப்பம் புகுந்தனர். உடைப்பெடுத்துச் சென்ற காவிரிக்கு அணைகட்டுவித்தனர். திருவையாற்றில் பூசப்படித்துறைக்குப் படிகள் அமைத்து அதற்குக் கல்யாணஸிந்து என்று பெயரிட்டுள்ளனர் என்னும் செய்திகள் பூசப்படித்துறை மண்டபத்துக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றன. இறைவன் திருவையாறுடைய மகாதேவர், இறைவியார் உலகுடைய நாச்சியார் என்னும் பெயர்களுடன் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளனர். (திருக்காமக்கோட்டத்தை இடித்துப் புதிதாகத் தேவகோட்டைத் திருப்பணிச்செல்வர் உயர்திரு. மெய்யப்பச் செட்டியாரால் கட்டப்பெறுவதற்கு முன் இருந்த கல்வெட்டை அரசியலார் ஆண்டு அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றனர். அதில் இறைவியாரின் திருப்பெயர் உலகுடைய நாச்சியார் என்றே குறிக்கப் பெற்றுள்ளது. இப்பெயர் மறைந்துபோய், இக்காலம் அறம்வளர்த்த நாயகி என்னும் பெயர் வழங்கி வருகின்றது.) அச்சுதப்பநாயக்கர், அவர் மனைவியார் உருவங்கள் மேலக்கோபுரவாசலில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. எனினும் அவர்களின் திருவுருவங்கள் முதல் பிராகாரத்தின் மேற்குத் திருச்சுற்று மாளிகையின் உள்பக்கத்தில் நல்ல கல்லிற் செதுக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றன. பச்சையப்ப முதலியார், அவருடைய இருமனைவியர் இவர்களின் உருவங்கள் பச்சையப்பன் மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றன. சோமாஸ்கந்தர் திருக்கோயில் சோழமன்னருடைய திருப்பணியை உடையது. இக்கோயில் கொடுங்கைவேலைகள் போற்றற்குரியன. வீரசரவண உடையார் காலத்தில் (சகாப்தம் 1303-கி.பி. 1381)
|