பக்கம் எண் :

247
 

பாண்டிகுலாசனி வளநாட்டுச் செந்தலை - கருப்பூர் கச்சிவீரப் பெருமான் மகன், நேர் குலைந்து இற்றுப் போன இத்திருக் கோயில் திருமண்டப மதிலைக் கட்டியுள்ளான்.

திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான் நூற்றெட்டு வேலி நிலத்தைக் கொடுத்துள்ளான். கோச்சடைய பன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியதேவர் காலத்தில் திருவையாறுடைய நாயனார்க்குச் சுத்தமல்லி வளநாட்டுப் பாம்புணிக்கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டனான சேரகோன் ஆறேமாக்காணிசொச்சம் நிலத்தைத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்துள்ளான்.

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப்பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், இராஜராஜ வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.

பொய்கைநாடு என்பது திருவையாற்றிலிருந்து கீழப்பழுவூருக்குப் போகும் பெருவழிக்கு மேற்கும் காவிரிக்கு வடக்குமாகிய பிரதேசமாகும். இப்பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளானே ஸ்ரீராஜராஜேச்சரம் உடையார்க்கு ஸ்ரீகாரியம் செய்தவன் ஆவன். அக்கோயிலில் நம்பி ஆரூரனார், நங்கை பரவையார் முதலானோர்ப் பிரதிமங்களை எழுந்தருளுவித்தவனும் இவனேயாவன். பொய்கை நாட்டுத் தலைநகராகிய பொய்கை எது என்று அறிந்து கோடற்கு இல்லை. இப்பொய்கை ஒரு வைப்புத்தலம் என்பதை, திருநாவுக்கரசர் பெருமானுடைய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தின் இறுதிப்பாட்டுப் புலப்படுத்துகின்றது. திருப்பழனம் சிவன் கோயிலில் உள்ள "ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு எ ஆவது ராஜராஜவளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவாமியூர் உடையார் திருப்புகலீசுவரமுடையார்க்கு" எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதியால் இப்பொய்கைநாடு தென்பொய்கைநாடு வடபொய்கைநாடு என்னும் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும், திருவாமியூர் - திருப்புகலீஸ்வரம் இப்பொய்கைநாட்டிற்குட்பட்டவை என்றும் பெறப்படுகின்றன.

தென்கயிலைக்கோயில்: இத்திருக்கோயிலில் உள்ள ஏழு