பக்கம் எண் :

248
 

கல்வெட்டுக்களுள் ஒன்று கிருஷ்ணராஜ உடையாரைப்பற்றியது. ஏனையவைகளெல்லாம் சோழநாட்டை ஆண்ட பிற்காலத்துச் சோழ மன்னர்கள் காலத்தனவாகும். இந்தச் சோழ மன்னர்கள் கல்வெட்டுக்களிலும், கருப்பஇல்லின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள "திருமன்னி வளர இருநிலமடந்தையும்" எனத் தொடங்கப்பெறும் கோப்பரகேசரி இராஜேந்திரசோழதேவரின் (கங்கைகொண்டசோழன்) முப்பத் தொன்றாம் ஆண்டில் பொறிக்கப்பெற்றதே பழமையான தாகும். அக்கல்வெட்டிலுள்ள "வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்று நம்பிராட்டியார் பஞ்சவன் மாதேவி......யாற்று எடுப்பித்தருளுகின்ற திருக்கற்றளி தென் கயிலாயமுடையார் கோயில்" என்னும் பகுதியால், முதலாம் இராஜேந்திரசோழதேவரின் மனைவியாராகிய பஞ்சவன் மாதேவி யாரால் இக்கோயில் கட்டப்பெற்ற தென்று தெரிகின்றது. அம் முதல் இராஜேந்திர சோழதேவர் கி.பி. 1014 முதல் 1042 வரை ஆண்டவராவார். அவரது ஆட்சியாண்டு முப்பத்தொன்றில் இக்கோயில் கட்டப்பெற்ற தென்று பெறப்படுகின்றமையால் இக்கற்றளி எடுப்பிக்கப் பெற்று இற்றைக்கு 952 ஆண்டுகள் ஆகின்றன.

இறைவர் திருப்பெயர் பஞ்சநதிவாணன் என்றும் இறைவி திருப்பெயர் அஞ்சலை என்றும் பெறப்படுகின்றன. இச்செய்தியை அர்த்தமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டுப் பாடல் அறிவிக்கின்றது.

முதலாம் இராஜேந்திர சோழதேவரின் இரண்டாம் மகனாகிய விஜயராஜேந்திரன் கல்வெட்டால், அம்மன்னனது மனைவியாரின் திருப்பெயர் திரைலோக்கியமுடையார் என்பதும், இக்கோயிலில் ஆடவல்லார் இவர்தம் பிராட்டியார் இவர்களுடைய திருமேனிகள் இருந்தன என்பதும், ஆடவல்லார்க்குத் திருக்கழுத்து, திருக்கை, திருவடி இவைகளுக்குச் சாத்தியருளப்பெற்ற அணிகலன்கள் முறையே சண்பங்காறை, திருக்கைக்காறை, திருவடிக்காறை என்ற பெயர்களுடன் வழங்கிவந்தன என்பதும், இவர்தம் பிராட்டியார்க்கு இக்காலம்போல் அல்லாமல் ஒற்றைத்தாலியே சாத்தியருளப்பெற்று வந்ததென்பதும், அவர் தம் திருக்காதணியின் பெயர் காறைகண்டி என்பதும், அக்காலம் பொன், மாணிக்கம், வயிரம் இவைகள் குடிஞைக்கல் என்னும் அளவையால் நிறுக்கப்பெற்று வந்தன என்பதும் வெளியாகின்றன.

மகாமண்டபத்தின் மேற்குப்புறச்சுவரில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி