பக்கம் எண் :

251
 

இக்கோயிலுக்கு ஒலோகமாதேவியார்இராஜேந்திரசிங்க வள நாட்டு, மிறைக்கூற்றத்துக்கலவாய்த்தலை என்ற ஊரில் வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தார்க்குநீர்போகும் குஞ்சரமல்லி வாய்க்காலுக்கு வடபால்சற்றேறக்குறைய நூற்றிரண்டு வேலி நிலத்தை நிவந்தமாகவிட்டிருந்தார். இவைபோன்ற பல அரிய செய்திகள்இக்கல்வெட்டுக்களால் விளங்குகின்றன.

16. திருஒற்றியூர்

ஒரு காலத்தில் தலங்கள் உள்படஎல்லா ஊர்களுக்கும் இறை விதித்து அரசன்சுற்றோலை அனுப்பியபொழுது அவனுக்கும் ஓலைநாயகத்திற்கும்தெரியாதபடி வரி பிளந்து "இவ்வாணை ஒற்றியூர்நீங்கலாகக் கொள்க" என்று அவ்வோலையில்எழுதப்பட்டிருந்ததை வியந்து அவ்வூர்க்கு ஒற்றியூர்(விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், பெருமானுக்குஎழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. "ஏட்டுவரியில்ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்டமலரும் திருநுதலார்" என்னும் பெரியபுராணச் செய்யுளும்காண்க.

இது திருவொற்றியூர் தொடர் வண்டிநிலையத்திற்குக் கிழக்கே 1. கி.மீ. தூரத்தில்இருக்கிறது. சென்னை மாநகரின் வடபகுதியாகவிளங்குவது. பேருந்து வசதி உளது. இது தொண்டை நாட்டுத்தலங்களுள் ஒன்றாகும்.

இறைவரின் திருப்பெயர் - (1) படம்பக்கநாதர்.உபமன்யு முனிவரிடத்துச் சிவதீட்சை பெற்றுத் தம்மைவழிபட்ட வாசுகியைத் இறைவர் தம் திருமேனியில்ஐக்யம் செய்து கொண்டமையால் இப்பெயர் பெற்றார்.அப்பாம்பின் வடிவத்தை இறைவர் திருமேனியில் இன்றும்காணலாம்.

(2) தியாகேசர்:- அரசனுக்குக்கொடுக்கும் பொருட்டுத் தம்மிடம் நிறைந்த அன்புடையஏலேலே சிங்கருக்கு மாணிக்கம் கொடுத்தருளினமையால்இப்பெயர் ஏற்பட்டது.

இவைகளன்றி, (3) ஆதிபுரீசுவரர், (4)புற்றிடங்கொண்டார், (5) எழுத்தறியும் பெருமான் என்னும்வேறு பெயர்களும் உண்டு. இவற்றுள் எழுத்தறியும்பெருமான் என்பதற்குக் காரணம் முன் கூறப்பட்டது.