இறைவியின் திருப்பெயர் -வடிவுடையம்மை. மரம் - மகிழ மரம். தீர்த்தம் - பிரமதீர்த்தம். துர்க்கையாரின் பெயர் - வட்டப் பாறையம்மை.மக்கள் இவரைச் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.நந்திதேவர், திருமால், பிரமதேவர்; வான்மீகிமுனிவர், சந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இங்குஎழுந்தருளி ஞாயிறுகிழாரின் மகளாய்த் தோன்றியசங்கிலியாரை மகிழ மரத்தடியில் சத்தியஞ் செய்துகொடுத்து மணந்த வரலாற்றை முன்னிட்டு இக்கோயிலில்ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மகிழடித் திருவிழாமிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. தைலவினைத்தொழில்மரபினராகிய கலிய நாயனார் அவதரித்து,கோயிலின் உள்ளும் புறம்பும் திருவிளக்கு எரித்துவரும் திருத்தொண்டை வறுமைக் காலத்தும் விடாதுநடத்தி வந்தும், ஒருநாள் முட்டுப்பட அது காரணமாகத்தம் கழுத்தை அரிந்து கொள்ளத் தொடங்கிய பொழுதுஇறைவன் தடுத்து அருள்செய்ததும் இப்பதியாகும்."பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளையைப்போல் ஆரும் துறக்கை அரிது அரிது' என்றுதாயுமானாரால் பாடப்பெற்ற பட்டினத்துப்பிள்ளையார் பேறு பெற்றதும் இப் பதியிலேதான். இத்தலத்திற்குஞானசம்பந்தர் பதிகம் ஒன்று; திருநாவுக்கரசர் பதிகங்கள்ஐந்து, சுந்தரர் பதிகம் இரண்டு ஆக எட்டுப் பதிகங்கள்இருக்கின்றன. கல்வெட்டு: 1இவ்வூர்க்கோயிலில் சோழமன்னர்களுள் மதுரைகொண்ட
1 See the Annual Reports on South Indian Epigraphy for theyear 1892, Numbers 104-110, year 1896,Numbers 399-405. year1911 Numbers 366-372,year 1912 Numbers 98-246, year 1938Numbers 162-167, year 1892 Numbers 104. See also Epigraphica Indica Vol. VII, page148, year 1892Number 105, Vol. V page 106, year 1892Number 110. See also South Indian Inscriptions, Vol. IV553 year 1892Number 106, Vol. III No. 64 year 1892Number 107-8, Vol. IV Numbers 555-556year 1892, Number 109, Vol. IVNumber558 year 1896 Numbers 399-405,Vol. V Numbers 1354-1360 year 1912Number 160, Vol. III Number 108 year1912 Number 164, Vol. III Number105,year 1912 Number 166, Vol. IIINumber 143 year 1912 Number 245Vol. III Number 145, year 1912Number 246 Vol. III Number 115.
|