பக்கம் எண் :

253
 

கோப்பரகேசரி வர்மன், உத்தமசோழதேவன், முதலாம்இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதலாம்இராஜாதிராஜ சோழன், முதற் குலோத்துங்கசோழன், முதலானோர்காலங்களிலும், கங்க பல்லவமன்னர்களில் விஜயஅபராஜித போத்தரையர், கோவிஜய நிருபதுங்கவர்மர்,கோவிஜயகம்பவர்மர், முதலானோர் காலங்களிலும்பாண்டியர்களில் ஜடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்திசுந்தரபாண்டிய தேவன் காலத்தும், இராஷ்டிரகூட மன்னர்களில்காஞ்சி, தஞ்சை இவைகளைக்கொண்ட கன்னர தேவர் காலத்தும்,விஜயநகர வேந்தர்களில், சாயண்ண உடையார், தேவராயமகாராஜா குமாரர் புக்கண்ண உடையார், வீரப்பிரதாபதேவராய மகாராயர் முதலானோர் காலங்களிலும், சம்புவராயமன்னர்களில் சகல புவன சக்கரவர்த்தி ராஜ நாராயணசம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள்இருக்கின்றன.

இறைவரின் திருப்பெயர்:- இக்கோயில்கல்வெட்டுக்களில் இறைவர் மகாதேவபட்டாரர், திருவொற்றியூர்மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடையநாயனார், படம்பக்க நாயகதேவர், என்னும் பெயர்களால்கூறப்பெற்றுள்ளனர்.

இவற்றுள் படம்பக்க நாயக தேவர்என்னும் பெயர், திரி புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதிராஜ தேவரின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டிலும், மகாதேவபட்டாரர் என்னும் பெயர் தெள்ளாறெறிந்த நந்திபோத்தரையர்கல்வெட்டிலும் காணப்படுகின்றன.

திருவிழா:

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழாவும், ஆனித் திருவிழாவும், மாசி மகவிழாவும்மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தன. பங்குனி உத்திரத்திருவிழாவின்ஆறாம் நாளில் படம்பக்க நாயக தேவரைத் திருமகிழமரத்தின்கீழ் திருவோலக்கஞ் செய்தருளுவித்துஆளுடைய நம்பியின் ஸ்ரீபுராணத்தைக் கேட்டருளச்செய்வதுவழக்கம்.

ஆனித்திருவிழாவின் ஆறாம் நாளில்மூன்றாங் குலோத்துங்க சோழன் இக்கோயிலிலுள்ளஇராஜராஜன் திருமண்டபத்தில் திருவோலக்கஞ் செய்தருளிவிநோதம் கொண்டருளினான் என்று அம் மன்னனது 19 -ஆம்ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது.மாசி மகவிழாவின் பொருட்டு சிறுவப்பேடாகியமும்முடிச் சோழ நல்லூர்ப் புறவுவரித்திணைக் களத்துக்