பக்கம் எண் :

254
 

கணக்காளன் நிவந்தம் அளித்திருந்தான். இந்நிவந்தம்அளிக்கப்பெற்ற காலம் மூன்றாங் குலோத்துங்கசோழ தேவரின் முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.

மண்டபங்கள்:

இக்கோயிலில் இராஜராஜ மண்டபம்என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தில்இருந்து கோயில் கருமங்களை ஆராய்ந்து வந்தனர்.

குலோத்துங்கசோழன் மண்டபம்:

இதுவும் கோயிலுக்குள் இருந்த ஒருமண்டபமாகும். இதில் நாடோறும் ஐம்பது அடியார்களுக்குஅன்னமளிக்கப்பெற்று வந்தது. இதன் பொருட்டுப் பையூர்க்கோட்டத்து அரசூருக்கு அருகில் உள்ள ஊராகிய பவனம்பாக்கத்திற்குஎழுத்தறிவார் நல்லூர் என்னும் பெயரை இட்டு அதில்ஒரு பகுதியை அன்னம் அளிப்பதற்கு நிவந்தமாக முதற்குலோத்துங்கசோழன் அளித்திருந்தான். இந்த ஏற்பாட்டை முதற்குலோத்துங்கசோழன் தன் தலைநகராகிய கங்கை கொண்டசோழபுரத்திலிருந்து செய்தருளினான்.

வியாகரணதான வியாக்கியான மண்டபம்:

இதுவும் கோயிலுக்குள் இருந்த மண்டபமாகும்.இது சித்தரசன் பொருட்டு துர்க்கையாண்டி நாயக்கனால்கட்டப் பெற்றதாகும். இம்மண்டபத்திற்கும் மற்றுமுள்ளதிருப்பணிகளுக்கும் உடலாக ஒற்றியூர் வடகரை, தென்கரையில்பொன்வரி வகுப்பால் உள்ள மாடையைப் புழல்கோட்டத்துநாட்டவர் அளித்துள்ளனர்.

மண்ணை கொண்ட சோழன்:

இப்பெயருள்ள மண்டபம் ஒன்று இக்கோயிலில்இருந்தது. வளவன் மூவேந்தவேளார், விக்கிரமசிங்கமூவேந்த வேளார் என்னும் இரண்டு அதிகாரிகள் இம்மண்டபத்திலிருந்துகோயில் சம்பந்தமான ஒரு வழக்கை விசாரித்ததாகமுதலாம் இராஜாதிராஜதேவரின் 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டுஅறிவிக்கின்றது.