திருமடங்கள்: இவ்வூரில் சதுரானன பண்டிதற்குத் திருமடம்ஒன்று இருந்தது. அதற்குத் திருமயானமடம் என்று பெயர்வைக்கப்பெற்றிருந்தது. இச்செய்தி முதலாம் இராஜேந்திரசோழதேவரின் 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. குலோத்துங்கசோழன் மடம்: இது கோயிலுக்குள் இருந்தது. இச்செய்திமுதற்குலோத்துங்க சோழன் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது. இராஜேந்திரசோழன் மடம்: ஆரிய தேசத்து மேகலாபுரத்து பிராமணிநாகலவ்வைச் சாநியான ஆரிய அம்மையாரால் கட்டப்பெற்றது.இம்மடத்திற்கு மடப்புறமாக இவ்வம்மையார் நிலம்வாங்கி விட்டிருந்தனர். வெளிப்பிராகாரத்தைக் கட்டியவர்: இக்கோயிலின் வெளிப்பிராகாரத்துத்திருமதிலைக் கட்டியவர் ஆதிமங்கலத்து ஆட்கொண்டநாயகனான சேதிராய தேவராவர். இது கட்டிமுடிந்தது மூன்றாங்குலோத்துங்க சோழதேவர் காலத்தில் ஆகும். விசயநகர பரம்பரையைச் சேர்ந்தஹரிஹரர் II - காலத்துக் கல்வெட்டு, அங்கராயன் மடம்ஒன்றைக் குறிப்பிடுகிறது. அளவுகருவி: கோயிலுக்கு நெய்கொண்டு வந்துஅளந்தவர்கள் அருமொழித்தேவன் நாழியால் அளந்துவந்தனர். எனவே இக்கோயிலில் வழங்கி வந்த அளவுகருவி அருமொழித்தேவன் நாழி என்னும் பெயர் பெற்றிருந்தது. இறைவர் திருப்பெயரை இட்டு வழங்கல்: படம்பக்க நாயகர் என்னும் இறைவரதுதிருப்பெயரை, கோயில் நாயகம் செய்துவந்தஒருவனுக்கு படம்பக்க நாயக பட்டன் எனவும், திரிபுவனசுந்தரத்தெரு மன்றாடிகளில் ஒருவனுக்குப் படம்பக்கன்எனவும் இட்டு அழைக்கப்பெற்றிருந்தனர். எழுத்தறிவார்என்னும் திருப்பெயரை,
|