பையூர்க் கோட்டத்தில் உள்ள அரசூர்க்குஅருகில் இருக்கும் பவனம் பாக்கத்திற்கு எழுத்தறிவார்நல்லூர் என்று வைக்கப்பெற்றிருந்தது. விசயநகர வேந்தனாகியவீரப்பிரதாப தேவராயர் காலத்தில் அதாவது சகம்1346 - இல் புழல்நாட்டு மணலி என்னும் ஊரினர் ஒற்றியூருடையநாயனார்க்கு உப்புத்தட்டு ஒன்றைக் கொடுத்திருந்தனர்.அதற்குப் படம்பக்க நாயகப் பேரளம் என்னும் பெயர்வைக்கப்பெற்றிருந்தது. அரசர்களின் சிறப்புப்பெயர்கள்: கோப்பரகேசரி வர்மராகிய உத்தமசோழதேவர்,சென்னி எறிபடைச்சோழன், உத்தமசோழன் எனவும் முதற்குலோத்துங்கசோழன் ஜெயதரன் எனவும், மூன்றாங்குலோத்துங்கசோழதேவர், வீரராஜேந்திர சோழதேவர், உலகுய்யவந்தபெருமாள், கோனேரின்மை கொண்டான் எனவும் இக்கோயில்கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளனர். ஒற்றியூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு: இவ்வூர், கங்கைகொண்ட சோழன்காலம் முதல், முதற்குலோத்துங்க சோழன் காலம்வரையில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துப்புழல் நாட்டில் உள்ள ஊர்களில் ஒன்றாய் இருந்தது.முதற்குலோத்துங்கன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து,இராஜேந்திர சோழவள நாட்டுப் புழல்நாட்டு ஊர்களில்ஒன்றாய் விளங்கிற்று. பிறசெய்திகள்: முதலாம் இராஜேந்திரனின் பிறந்தநட்சத்திரம் மார்கழித் திருவாதிரையாகும். இச்செய்திஅம்மன்னனது 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெறும்."திருவொற்றியூருடைய மகா தேவர்க்கு ராஜேந்திரசோழர்திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடியருளவேண்டுமிடத்து திருவொற்றியூர் திருமயான மடமுடைய சதுரானனபண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்தகாசு நூற்றைம்பது"கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இக்கோயிலில் வீரராஜேந்திரன்திருப்பள்ளியெழுச்சி, திரிபுவன வீரதேவன் சந்திஇவைகளுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றிருந்தன.இவற்றுள் திரிபுவன வீரதேவன் என்பது மூன்றாங்குலோத்துங்க
|