சோழனுக்குரிய சிறப்புப் பெயராகும். அவன் பேரால்ஏற்படுத்தப்பெற்ற இச்சந்திக்கு குலோத்துங்கசோழவள நாடான புலியூர்க் கோட்டத்தில் சிவபாதசேகரநல்லூராகிய குளப்பாக்கத்தில் நூறுவேலி நிலம்விடப்பெற்றிருந்தது. இவ்வூரில் சாலியர்கள் வசித்துவந்த தெருக்கள், ஜெயசிங்ககுல காலப்பெருந்தெரு என்றும்,இராஜராஜப்பெருந்தெரு என்றும், மன்றாடிகள் வசித்துவந்ததெருக்கள் திரிபுவனச் சுந்தரச்சேரி, திரிபுவனநகரத்தெருஎன்னும் பெயர்களைப் பெற்றிருந்தன. மன்றாடிகள்என்பார் திருவிளக்குக் குடிகளாவார். இவர்கள் நுந்தாவிளக்கினுக்கு விடப்பெறும் சாவாமூவாப் பசுக்களையோஅல்லது ஆடுகளையோபெற்று, உரிய திட்டப்படி, தவறாதுநெய் அளப்போராவர். இக்கோயிலில் உத்தம சோழதேவர்காலத்தில் கவரிப்பிணாக்கள் இருபத்து நால்வரும்,காளம் ஊதுபவர் எண்மரும் இருந்தனர். இக்கோயிலிலுள்ள கிரந்தக் கல்வெட்டுக்கள்,ஒற்றியூரை ஆதிபுரி என்றும், இறைவரை, ஆதிபுரீஸ்வரர்என்றும் கூறுகின்றன. கங்க பல்லவவம்சத்து விஜயகம்பவர்மனின்19 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ஒற்றியூரில் நிரஞ்சனீஸ்வரத்துமகாதேவருக்கு நிரஞ்சன குரவரால் கோயில் கட்டப்பெற்றசெய்தியை உணர்த்துகின்றது. சோழ நாட்டுத் தென்கரைநாட்டு, பொய்யில் கூற்றத்து சிறுகுளத்தூருடையான்மாறன் செம்பியன் சோழியவரையன், சீட்புலியை யெறிந்துநெல்லூரை அழித்துத் திரும்பியவன் திரு ஒற்றியூர்மகாதேவர்க்குத் திருநுந்தா விளக்கு எரிப்பதன்பொருட்டு 96 சாவாமூவாப் பேராடுகளை அளித்தான் என்பதைமதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மனின் முப்பத்து நான்காவதுஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. 17. திருஓமாம்புலியூர் புலிக்கால் முனிவரால் (வியாக்கிரபாதரால்)பூசிக்கப் பெற்றதால் புலியூர் என்றும், பாதிரிப்புலியூர்,பெரும்பற்றப்புலியூர், பெரும்பூலியூர் என்பவைகளைப்போல வேறுபாடு தோன்ற வேள்விச் சிறப்பினையுடையஎன்னும் பொருளில் ஓமாம் என்னும் அடை மொழியும்கொடுக்கப்பெற்று ஓமமாம் புலியூர் என்னும் பெயர்எய்திற்று. சம்பந்தர் தேவாரத்தில் இவ்வூர் ஓமமாம்புலியூர்என்றும், அப்பர் தேவாரத்தில் ஓமாம்புலியூர் என்றும்கூறப்பெற்றுள்ளது. வேடன் ஒருவன் புலிக்குப் பயந்துஓடிவந்து இக்கோயில் வில்வமரத்தில் ஏறிக்கொண்டான்.அப்புலியும் அம்மரத்தை விட்டு அகலாது
|