கீழிருந்தது. அது நீங்குமாறு, வேடன் வில்வஇலைகளைப் பறித்து இரவு முழுவதும் அப்புலியின்மேல்போட்டான். அவ் இலைகள் அம்மரத்தடியில் எழுந்தருளியிருக்கும்இறைவர்மீதுபட, அவர் அவ்வேடனுக்கு மறுநாட் காலையில்முத்தியளித்தார். அது காரணமாகவே இப்பெயர் பெற்றதுஎன்பர். ஊரின்பெயர் ஓமாம் புலியூர் எனினும் அங்குள்ளகோயிலுக்கு வடதளி என்று பெயர். (தளி - கோயில்).வடதளி என்றமையால் கோயிலுக்குக் கீழ்ப்பக்கத்தில்இருக்கும் கோயில் தென்தளி ஆதல் வேண்டும். இது சிதம்பரத்திற்குத்தென்மேற்கிலுள்ள காட்டுமன்னார் குடிக்குத் தெற்கேகொள்ளிடப் பேராற்றின் வடகரைப் பக்கத்தில்இருக்கிறது. இது காவிரியின் வடகரைத் தலங்களுள்முப்பத்தொன்றாவது ஆகும். இறைவரின் திருப்பெயர் துயரந்தீர்த்தநாதர்.இறைவியின் திருப்பெயர் பூங்கொடிநாயகி. தீர்த்தம்கொள்ளிடப்பேராறு. இத்தலத்து அந்தணப்பெருமக்களின் பெருமையை ஞானசம்பந்தப் பெருந்தகையாரும்,அப்பர் அடிகளாரும் இவ்வூர்ப் பதிகங்களில் முறையே"நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்று எரி ஓம்பும்ஒள்ளியார் வாழும் ஓமாம்புலியூர்" என்றும், "ஒன்றியசீர்இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர்புகழ் நான்மறைஓமாம்புலியூர்" என்றும் கூறியுள்ளனவற்றால் அறியலாம்.இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர்பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு: இத் திருக்கோயிலில் சோழமன்னரில்மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் காலத்துக்கல்வெட்டு ஒன்றும் பல்லவரில் சகல புவனசக்கிரவர்த்திகோப்பெருஞ்சிங்க தேவருடைய காலத்துக் கல்வெட்டுஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சோழமன்னர் காலத்துக் கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர்வடதளி உடையார் என்றும், பல்லவர் காலத்துக் கல்வெட்டில்வடதளி உடைய நாயனார் எனவும், வடதளி உடையார்வரும் துயரம் தீர்த்த நாயனார் எனவும் கூறப்பெற்றுள்ளது.இங்குக் குறித்த சோழர் பல்லவர் காலங்களில் இவ்வூர்வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப்பிருமதேயம். ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்ப்பெதி மங்கலம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. விருதராசபயங்கர வளநாட்டின் உட்பகுதியாய்அடங்கிய நாடுகளில் காநாடு என்பது ஒன்றாகும். அது மேற்காநாடுகீழ்க்காநாடு என்னும்
|