பக்கம் எண் :

259
 

இருபகுதிகளை உடையது, இவற்றுள் கொள்ளிடப் பேராற்றின்வட கரையை ஒட்டிய பிரதேசமாகிய ஓமாம்புலியூர் திருக்கடம்பூர்இவைகள் மேற்காநாட்டைச் சேர்ந்தவனவாகும். இவ்ஓமாம்புலியூர்க்குக் கிழக்கேயுள்ள திருக்கானாட்டுமுள்ளூர், கீழ்க்காநாட்டைச் சேர்ந்ததாகும். இவ்ஓமாம்புலியூர்க்கு அண்மையில் ஆதனூர் என்னும் ஊர்இருக்கிறது. இதுவே திருநாளைப் போவார் பதியாகும்.அவர் பதியைச் சேக்கிழார் மேற்காநாட்டு ஆதனூர்என்று குறித்திருப்பதை அறிய இவ்வூர்க் கல்வெட்டுப்பெரிதும் பயன்படுகிறது.

18. திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)

மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால்இப் பெயர்பெற்றது.

ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில்வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறுமகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம்என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில்மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடுபுணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி)ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம்என்றும் மருவிற்று. கள்ளக்கம்பனை, நல்லகம்பனை என்பவைகளில்காண்க.

இருக்கும் இடம்: காஞ்சிபுரம் தொடர்வண்டிநிலையத்திற்கு மேற்கே சுமார் 2-5.கி.மீ. தூரத்தில்இருக்கின்றது. சென்னை, செங்கற்பட்டு, திண்டிவனம்,அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்தும்காஞ்சிபுரம் வரப் பேருந்துகள் உள்ளன.

இறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர்.உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்கஇறைவியார் கயிலையினின்று காஞ்சிபுரத்திற்குஎழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில்திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக்கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்துவந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார்.அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும்முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார்.அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர்உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு.இறைவியாரின் திருப்பெயர்: