ஏலவார்குழலி, காமாட்சியம்மை. விநாயகர்பெயர்:விகடசக்கர விநாயகர். இவர் தெற்குத் திருவாசலில்,ஆயிரக்கால் மண்டபத்தின் முன் புறத்தில் எழுந்தருளியிருக்கின்றார். தீர்த்தம்: கம்பைமாநதி; சிவகங்கைஎன்பன. தலப்பெருமை: இது முத்திதரும் தலங்கள்ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத்,திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில்இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்திநாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளியதலம். க்ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன்நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார்,சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற பதி. இதில்பிர்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்தஇலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையேவெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம்என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சிஏகம்பத்திற்குமாத்திரம் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன.இவை மூவராலும் பாடப் பெற்றவை. இவ்வூரில் (காஞ்சிபுரத்தில்) கச்சியேகம்பத்துடன்கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு,கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்றகோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும்ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம்,திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. இக்கோயிலின் வெளிமதில்கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள்எல்லாம் சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில்மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன.சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும்கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில்இருக்கும் ஒரு சிலை கரிகாலன் உருவம் என்பர். அதற்குத்தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால்,கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது. திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள்அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர்அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகியகாஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றியகச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும்,
|