பக்கம் எண் :

261
 

இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும்,பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள்அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதிஆகிய இவைகளும் இத்தலத்தைப் பற்றிய நூல்களாகும்.

கல்வெட்டு:

1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள்படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி(கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன்,குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்டகோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது

2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன்(கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.

3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.

4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன்(கி.பி. 1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது.காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரிசாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசு பெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.

5. ராயர் மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.

6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன்(கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.