பக்கம் எண் :

263
 

கச்சி ஏகாம்பரநாதர் கோயிலின் கீழக்கோபுரத்திற்கு அருகில் ஆலாலசுந்தரன்மடம் ஒன்று இருந்தது. புதுக்கோடு மருந்தவள்ளலின் சிஷ்யனாகிய திருநாவலூர், கூடலுடையான் தழுவக்குழைந்தான்நிலம் அளித்திருந்தான். அம்மடத்தைப் பற்றி,சகம் 1403-இல் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதுவன்றி ஈசானதேவர் மடம் ஒன்றும் இருந்தது.

பதினாறு கால் சித்திரமண்டபத்திற்கு எதிரில் உள்ள தாண்டவதேவர் கோயிலும், திரயம்பகேஸ்வரர் கோயிலும் அரசனது மகளாகிய திரயம்பக்க தேவியால் கட்டப்பெற்றதாகும். சகம் 1378இல் ஏற்பட்ட மல்லிகார்ச்சுனதேவ மகாராயர் கல்வெட்டு, புதுப்பாக்கம், வேளையூர் இவை இரண்டு ஊர்களும் திருவேகம்பமுடைய நாயனார்க்கும்,காமாட்சி தேவியார்க்கும் முறையே கொடுக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றது.

19. திருக்கஞ்சனூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில், நரசிங்கன்பேட்டை தொடர் வண்டி நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது.

இறைவர்: அக்நீஸ்வரர்.

இறைவி: கற்பகநாயகி.

தீர்த்தம்: அக்நி தீர்த்தம்.இது திருக்கோயிலுக்குக் கிழக்கில் உள்ளது.

அக்நியும், பிரமனும் வழபட்டுப் பேறு எய்தினர். நடராசப் பெருமான் சிவகாமி அம்மையார் இவர்களின் திருமேனிகள் கருங்கல்லால் ஆக்கப்பெற்றவை.அரதத்த சிவாசாரியார் சைவத்தின் பெருமையை நிலைநாட்டிய இடம்.

கல்வெட்டு:

1இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் விக்கிரமசோழ தேவன், இராஜகேசரிவர்மன் திருபுவனச்சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன்,


1 See the Annual Report on South Indian Epigraphy for the year 1931 - Nos. 59-67.