பக்கம் எண் :

264
 

திருபுவனச்சக்கரவர்த்தி வீரராஜேந்திரதேவன்இவர்கள் காலங்களிலும்; விஜயநகரமன்னரில் கிருஷ்ணராயமகாராயர் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள்இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருஅக்நீஸ்வரம் உடையார் என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர்.இக்கோயிலில் விழாக் காலங்களில் எழுந்தருளும்கற்பகப்பிள்ளையை எழுந்தருளுவித்தவர் பாஸ்கரபட்டர்மகன்,கனகசபைப்பட்டர் ஆவர். இதை இவர் எழுந்தருளுவித்ததுசகம் 1447 அதாவது கி. பி. 1525 ஆகும். இவ்வூரில்விக்கிரமசோழன் கல்வெட்டு ஐந்நூற்று எண்மன் மடத்தைக்குறிப்பிடுகிறது. இவ்வூர் விருதராச பயங்கர வளநாட்டுநல்லாற்றூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது.

20. திருக்கயிலாயம்

இது இமயமலைச் சிகரத்தில்இருக்கிறது. வடநாட்டுத் தலங்களுள் ஒன்று. நொடித்தான்மலைஎன்றுங் கூறப்பெறும். (நொடித்தல் - அழித்தல்) அழித்தல்தொழிலை உடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும்தலமாதலால் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.நொடித்தான் மலை என்னும் இப்பெயர் சுந்தரர் தேவாரத்தில்தான்காணப்பெறுகின்றது. சம்பந்தரும், அப்பரும் இதைக்கயிலாயம் என்றே பாடியுள்ளனர். இது பூ கயிலாயம்எனவும் பெயர்பெறும். இறைவனது இருப்பிடமாய் எங்கும்பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு. இப்பூ கயிலாயம்தேவர்களாலும் சென்று அடைதற்கரியது. இம்மலையை உமாதேவிஅஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது. இறைவன்தன் கால்விரலால் அழுத்த மலையின் கீழ் அகப்பட்டுத்தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்கள் பெற்றதும்;இங்கு இறைவனது திருக்கோலத்தைக் காண வேண்டி வந்தஅப்பர் பெருமானின் கால்கள், கைகள் மார்பு இவைகள்தேயப்பெற்றுச் செயலற்றுக் கிடந்த நிலையில்,இவரது உறுதிப்பாட்டை அறிந்து இறைவன் காட்சி தந்தருளிஒரு திருக்குளத்தைக்காட்டி அதில் மூழ்கி, ஐயாற்றில்எழுந்து தன் கோலத்தைக் காணுமாறு திருவாய் மலர்ந்தருளப்பெற்றதும்,திருஞான சம்பந்தரால் திருக்காளத்தியிலிருந்தேபாடப்பெற்றதும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான்பெருமாள் நாயனாரும் முறையே யானை, குதிரை இவைகளின்மீது வந்து கணநாதர்களாய் எழுந்தருளப் பெற்றதும், சேரமான்பெருமாள்நாயனாரால் ஆதியுலா பாடப் பெற்றதும், பிறவும், இத்தலத்தின்சிறப்புக்களாகும்.