இறைவன் திருப்பெயர் - கயிலாயநாதன். இறைவி திருப்பெயர்- பார்வதி. தீர்த்தங்கள் - கங்கை முதலியன. இத்தலத்திற்குஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசர்பதிகங்கள் நான்கு, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம்ஒன்று ஆக ஏழு பதிகங்கள் இருக்கின்றன.1 21. திருக்கருகாவூர் ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு இத்தலத்து இறைவி மருத்துவம் பார்த்துக் கருவைக் காத்தபடியால் கருகாவூர் என்னும் பெயர் எய்திற்று. இது இக்காலம் திருக்களாவூர் என்று வழங்கப் பெறுகின்றது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாவநாசம் ரயில்வே நிலையத்திற்குத் தெற்கே 6. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஐயன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திலிருந்தும் போகலாம். கும்பகோணம், பாவநாசம் ஆகிய ஊர்களிலிருந்து திருக்கருக்காவூர் செல்லப் பேருந்துகள் பல உள்ளன. தலப் பிள்ளையார் - கற்பகப் பிள்ளையார். இறைவர் திருப்பெயர் - முல்லைவனேசுவரர். மணலால் ஆக்கப்பெற்றிருக்கும் இறைவர் திருமேனியில் முல்லைக்கொடி சுற்றியிருக்கும் அடையாளம் இருப்பதால் இப்பெயர் பெற்றார். இறைவியின் பெயர் - (1) கர்ப்பரட்சகி. ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு மருத்துவம் பார்த்துக் கருவைக்காத்து அருளியமையால், இப்பெயர் பெற்றார். (2) கரும்பனையாள். தீர்த்தம் - பாற்குளம். தலமரம் - முல்லைக்கொடி. இறைவர் திருமேனி மணலால் ஆக்கப்பெற்றது. சந்திரன் வழிபட்டதலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.
1 See the Annual Reports on South Indian Epigraphy for the year ending 31st March 1927.
|