27. திருக்கீழ்வேளூர் வேள் (முருகப்பெருமான்) வழிபட்ட காரணத்தால் இப் பெயர் பெற்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் எண்பத்துநான்காவது ஆகும். கீழ்வேளூர் தொடர்வண்டிநிலையத்திற்கு வடக்கே 1.5.கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து நாகை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. நகரப் பேருந்துகளும் உள்ளன. இறைவரது திருப்பெயர் கேடிலியப்பர்.இப்பெயர் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது.இறைவியாரது திருப் பெயர் வனமுலைநாயகி. இத்திருப்பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் இவ்வூர்ப்பதிகம் இரண்டாம் திருப்பாட்டில்"வாருலாவிய வனமுலையவளொடு" என்று எடுத்து ஏத்தியிருப்பது பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும். தீர்த்தம் சரவணப்பொய்கை. முருகவேள் பூசித்துப் பேறுபெற்ற பதி.அவருடைய பூசைக்கும் தவத்துக்கும் கெடுதியுண்டாகாதவாறு இறைவியார் துர்க்கையின் அம்சமாகக் காவல் பூண்டிருந்தார். அவர்க்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.அவருடைய திருக்கோயில் முதல் பிராகாரத்தில் வடபக்கத்தில் இருக்கின்றது. இச்செய்தி, "மண்டுபே ரொளியான கேடிலியை | யர்ச்சித்தவள்ளிநாயகன் வருகவே | மாகாளிகாத்த கீழ்வேளூரில் மாதவம் | வளர்த்த வேலவன்வருகவே" |
என்னும் இத்தலத்தைப்பற்றிய க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழால் அறியலாம். அகத்தியர், கூத்தப்பெருமானது வலத்திரு வடியைக்கண்டு தரிசித்த பதியும் இதுவேயாகும். குபேரனுக்குத் தனியாகக் கோயில் உள்ளமையால் அவனும் பூசித்துப்
|