பேறுபெற்றிருக்கவேண்டும். இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு திருப்பதிகங்கள்இருக்கின்றன. இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருந்தகையார் கூறியுள்ளார். எனவே, கோயில் இறைவனார் இறைவியார் திருப்பெயர்கள் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும். கல்வெட்டு: இந்தக்கோயிலில் மூன்றே கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டன. 2 கல்வெட்டு சோழர்களினவும், 1தஞ்சை மராட்டிய மன்னனதுமாகும். மூன்றாம் இராஜராஜன் தனது 18 ஆம் ஆட்சியாண்டில் (22-12-1233) இக்கோயிலுக்குப் பூதானம் செய்துள்ளான். அம்மன் கோயிலிலே அவருடைய பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது. தஞ்சை துரைராஜ மகாராஜர் (கி.பி. 1763-87) இக்கோயிலின் பிராகார மதிலைக் கட்டினார். இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பத்து,பதினெட்டு இவ்வாண்டுகளில் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும் மகாராட்டிர மன்னரில் தஞ்சாவூர் துளசிராஜிராஜாவின் சகம் 1697 அதாவது கி.பி. 1775 இல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் ஆக மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் துளசிராஜிராஜா கல்வெட்டு இக்கோயில் பிராகாரத்தின் சுவர்கள் அம்மன்னனால் கட்டப்பட்டதையும் ஏனைய இருகல்வெட்டுக்கள் நாள் வழிபாட்டிற்கு நிலம் அளித்த செய்தியையும் தெரிவிக்கின்றன.1 28. திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் உம்பர் ஏறிய புகழ் கும்பகோணம் நகரின் நடுவில் இருக்கும் நாகேச்சுரக்கோயிலே, குடந்தைக்கீழ்க் கோட்டம் ஆகும்.
1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904,No.515-517
|