பக்கம் எண் :

279
 

இறைவர்: நாகேசுவரர்.

இறைவி: பெரியநாச்சியார்.

ஆதிசேடன், நாகேசுவரர் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்தினர். ஆண்டு தோறும் சித்திரைமாதம் 11, 12, 13 தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி இறைவரின் திருமேனியில் படுகின்றது. இக்கோயிலில் கங்கைக் கணபதியின் திருமேனி மிகமிக அழகு பொருந்தியது. இங்குக் கூத்தாடுந்தேவர் கோயில் மிக்க வேலைப்பாடு உடையது. இங்கு எழுந்தருளியிருக்கும் துர்க்கையம்மன் மிகச் சக்தி வாய்ந்தவர்.

கல்வெட்டு:

இத் திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதற் பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன்,உத்தமசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், 'சீர்மன்னு இருநான்கு திசையும்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இராஜகேசரிவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், மூன்றாங் குலோத்துங்க சோழன் இவர்கள் காலங்களிலும், மகாமண்டலேசுவரன் கோனேரிதேவமகாராசன் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

சோழர் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்குடமூக்கில் திருக்கீழ்க்கோட்டத்துப் பரமசுவாமி, திருக்கீழ்க்கோட்டத்துப் பட்டாரகர்,திருக்கீழ்க்கோட்டத்துப் பெருமாள், திருக்கீழ்கோட்டத்து மகாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி:

திருக்குடமூக்கில் உடையார் திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயில் முதல் பிராகாரத்துக் கீழைத் திருமாளிகையில்,வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பிய முடையானான செம்பியன் பல்லவரையன், திருப்புறம்பியத்து இறைவரை எழுந்தருளுவித்து நிவந்தம் அளித்துள்ளான்.

இதை உணர்த்தும் கல்வெட்டு: ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளி விஜயாபிஷேகமும் வீராபிஷேகமும் பண்ணி அருளின ஸ்ரீ திரிபுவன