பக்கம் எண் :

280
 

வீரதேவர்க்கு யாண்டு முப்பத்தஞ்சாவது உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர்நாட்டுத் திருக்குடமூக்கில் திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயில் முதல் பிராகாரத்துக் கீழைத் திருமாளிகையில் வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பிய முடையானான செம்பியன் பல்லவரையன் எழுந்தருளுவித்த உடையார் திருப்புறம்பிய முடையார்க்கு அமுதுபடிக்கு நாளொன்றுக்கு அரிசி நானாழியும் இவ்வரிசியால் வந்த அப்பமுதும்,கறியமுதும், உப்பமுதும், மிளகமுதும், தயிரமுதும், நெய்யமுதும்,அடைக் காயமுதுபாக்கும், இலையமுது மற்றும் திருமஞ்சனமும் திருப்பள்ளித் தாமமும், திருமேற்பூச்சும் உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் சிறுகாலைச் சந்தி விளக்கு இரண்டும் உச்சிச் சந்தி விளக்கு ஒன்றும் இரவைச் சந்திவிளக்கு நாலும், இச் சந்திவிளக்கு ஏழுக்கும் வேண்டுந் திருவிளக்கு எண்ணையும் இந்நாயனார் ஸ்ரீ பண்டாரத்து உடலிலே இத் திருப் புறம்பிய முடையார்க்குப் பூசைக்கும் அமுதுபடிக்கும் விடக்கடவதாகவும், இப்படிவிடுமிடத்து முப்பத்தஞ்சாவது சித்திரைமாஸ முதல் நிவந்தக் கட்டாகவிடக்கடவதாகவும், பூசிக்கும் நம்பிமார் சிவப்பிராமணர்.....சமைப்பார்க்கும் வேண்டும் நிவந்தத்துக்குஇக் கோயிலில் உடலிலே விட்டு இத்திருப் புறம்பியமுடையார் அமுது செய்தருளின சோறு நானாழியும் சோற்றடைப்பிலே கூட்டிக்கொள்ளக் கடவதாகவும். இப்படியால் வந்த நிவந்தக்கட்டுப்படியே சந்திராதித் தவல் விடக்கடவதாகவும்,இதுக்கு உபயமாக உடையார் திருக் கீழ்க்கோட்டமுடையார்க்கு திருமகரதோரணம் பண்ணிச் சாத்துகைக்கு உபையமாக வேளூர்கிழவன் ஆழ்வான் திருப்புறம்பியமுடையானான செம்பியன் பல்லவரையன் முப்பத்தஞ்சாவது நாள் ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின காசு பதினேழாயிரமும் ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கினமைக்கு இவை கோயிற்கணக்கு இராமனூருடையான் மூலபருஷப் பரியனெழுத்து. இக் காசு பதினேழாயிரமும் சீபண்டாரத் துக்கு ஒடுக்கினமைக்கு தேவகன்மி உய்யக்கொண்டான் பட்டன் எழுத்து. இக்காசு பதினேழாயிரமும் கோயிலில் ஓடு .... .... .... .... ....

(குறிப்பு: இக்கல்வெட்டு இதுவரை வெளிவந்திலது. படித்து எழுதலாயிற்று.)

கூத்தாடும் திருஞானசம்பந்த ஈஸ்வரமுடையார்கோயில்:

இப்பெயருடைய கோயில் ஒன்று இக் கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் இருக்கின்றது. அதைக் கட்டியவர் கூத்தாடும் திருஞான சம்பந்தர் மாணிக்கவாசகர் ஆவார். இக்கோயிலுக்குப் பழுது ஏற்படுங்கால் அதைப்