புதுப்பிப்பதற்கும், இறைவர்க்கு அணிகலன்களுக்கும்ஆகக் கூத்தாடும் திருஞானசம்பந்தர் மடந்தைபாகர் நிவந்தம் ஏற்படுத்தியிருந்தார். மடந்தைபாக நாயனார் கோயில்: இப்பெயருடைய கோயில் ஒன்று இக் கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் இருப்பதைத் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 20 ஆம் இராச்சிய ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. செல்வபிரான் திருமேனி: முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டு ஸ்ரீ விமானத்தில் செல்வபிரான் திருமேனியைப்பற்றிக் குறிப்பிடுகிறது. பொதுச்செய்திகள்: குடமூக்கின் ஒரு பகுதியாகிய மேல் காவிரியில் 24 வேலியை திருக்குடமூக்குச் சபையார் அரசனிடமிருந்து அபிஷேக தட்சிணையாகப் பெற்றனர்.அதில் இரண்டு மா நிலத்தை இங்கணாட்டுச் சிற்றிங்கண் சிற்றிங்கணுடையான் கோயில் மயிலையான பராந்தக மூவேந்த வேளானுக்குக் குடமூக்குச் சபையார் விற்றுக் கொடுத்தனர். அதை அவன் கீழ்க்கோட்டத்தில்பிரபாகரம் வக்காணிப் பார்க்குப் பட்டவிருத்தியாகக் கொடுத்துள்ளான். (வக்கணிப்பார் - விவரித்துரைப்பார். பட்டவிருத்தி - கல்வியில் வல்ல பிராமணர்களுக்குஇறையிலியாக விடப்பட்ட நிலம்.) முதற் பராந்தகசோழனின் 38ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருக்குடமூக்குச் சபையார்அரிசலூரில் நிலம் விற்றதைக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு, பாண்டிப் படையையும் ஜலசயனம் என்னும் கோயிலையும் குறிப்பிடுகின்றது. மலைநாட்டு நெடும்புறையூரிலிருந்த பூவன்கண்ணன் இக்கீழ்க்கோட்ட முடையார் கோயிலுக்கு விளக்குக்கு 25 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான்.அபூர்விகளுக்கும் சிவயோகிகளுக்கும் உணவின் பொருட்டு நிவந்தங்கள் அளிக்கப்பெற்றிருந்தன. (அபூர்விகள்- தலயாத்திரை செய்யும் வேதம்வல்ல பிராமணர்.) உத்தமசோழர் மனைவியாரின் பெயர் வீரநாராயணியார் என்பதையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: கும்பகோணம் பழங்காலத்தில் திருக்குடமூக்கு என்றே
|