பக்கம் எண் :

28
 

ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்கு, அறம் பொருள்வீடு இன்பம் ஆறங்கம், வேதம், தெரித்தானைத் திருநாகேச் சரத்துளானைச், சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே" (தி.6 ப.66 பா.2).

இதே பதிகத்துள் மூன்றாம் பாடலில், "காதலித்து நினையாத கயவர்நெஞ்சில் வாரானை" "மதிப்பவர்தம் மனத்துளானை"என்னும் இறைத்தத்துவம் பேசப்பெறுவதையும் காணலாம்.

மெய்யர்க்கு மெய்யன்:

இறைவன் தன்னை விரும்புவார்க்கு மெய்ப்பொருளாக இருந்து அருள்செய்பவன். இறைவனை விரும்பாதவரை அரும்பாவி என்கிறார். அப்பாவிகட்குப் பொய்ப்பொருளாகவே இருந்து வருபவன். இப்பாடல் "மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும்பாவியர்கட்கென்றும் பொய்யானை" (தி.6ப.66 பா.5) என அறிவித்துள்ளார். அடுத்த பாடலில் "அறம்புரியாத் துரிசர்தம்மைத் துறந்தான்" என்றும் "தோத்திரங்கள் பலசொல்லி வானோர் ஏத்த, நிறைந்தானை" என்றும் அருளினார். அடுத்த பாடலில் "மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை" என்றும், "அஞ்செழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் சிறந்தானை" என்றும் அடுத்து "ஏகம்பத்தில் உறைவானை ஒருவரும் ஈங்கறியாவண்ணம் தன் உள்ளத்துள்ளே ஒளித்துவைத்த சிறையானை" என்றும், "அறத்தில் நில்லாப் பிரமன்தன் சிரம் ஒன்றைக், கரம் ஒன்றினால் கொய்தானை" என்றும் பல தத்துவ உண்மைகளையும் புராண வரலாறுகளையும் இப்பதிகம் உணர்த்துவது காணலாம்.

சொற்பாவும் பொருள்:

சொல்லில் பரவியுள்ள பொருளை அறிந்து ஓதுவதே பெரும்பயன்நல்குவது. இதனையே மணிவாசகரும், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வாரே செல்வர். இவரே சிவபுரம் சேரத் தக்கார். சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்த இருப்பாரும் இவரே" (தி.8 சிவபுரா. வரி 95) என்றுகுறித்துள்ளார். இதைத்தான் திருக்கீழ்வேளூர்த் தாண்டகம் "சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித், துங்காதார் மனத்திருளை வாங்காதானை" (தி.6 ப.67 பா.2) என்று குறிக்கின்றது. இப்பாடலில் பொருள் உணர்ந்து சொல்லாதார் உளத்திருளை நீக்கான், என்றுஎதிர்மறையாய்க் கூறியுள்ளார். பன்னிரு திருமுறைகளும் உரையுடன் வருதற்குக் காரணமாயிருந்த திருமுறைப்பாடல் இது என்பது குறிக்கத் தக்கது.

ஊன்கருவின் உள்நின்ற சோதி:

திருமுதுகுன்றத்தீசனை வணங்கினார் திருநாவுக்கரசர், முப்பொருள்