உண்மை தெளியத்தோன்றியது. இக்கருத்தைத் திருமுதுகுன்றத் திருத்தாண்டகம்"ஊன்கருவின்" (தி.6 ப.68 பா.4) என்ற பாடலில் தெளிவிக்கிறார். ஊன் -உயிர் குடியிருக்கும் உடம்பு. கரு - உடம்பில் குடியிருக்கும் உயிர். சோதி -அவ்வுயிரில் ஒளியாய் உள்ள இறைவன். ஊன் என்பது பாசத்தையும், கரு என்பது உயிர்களையும், சோதியானை என்பது கடவுளையும் குறித்துள்ளன. அப்பாடற்பகுதி "ஊன்கருவின் உள்நின்ற சோதியானை, உத்தமனைப் பத்தர்மனம்குடி கொண்டானை" என்பதாம் திருஞானசம்பந்தரும் இத்திருமுது குன்றத்தேவாரமாகிய "விளையாத தோர்பரிசில் வருபசு, பாச, வேதனை, ஒண்தளை, ஆயின தவிரவ்வருள்தலைவன்" (தி.1 ப.12 பா.3) என்னும் பாடலால் முப்பொருள் உண்மையோடு, இருவினை, மாயையையும் குறித்துள்ளமை காண்க. கோச்சோழர்: முற்பிறவியில் சிலந்தியாயிருந்து வெண்ணாவல் மரத்தடிக்கீழ் வீற்றிருந்த பெருமான் மீது சருகு படாவண்ணம் தன் வாயின் நூலால் பந்தர் செய்த புண்ணியத்தால் மறுபிறவியில் சோழமன்னரான கோச்செங்கட்சோழர் வரலாறு பெரியபுராணத்துள் காண்பது. சிலந்தியும், யானையும் முற்பிறவி உணர்ந்தவர்கள். முற்பிறவியிலும் இருவரும் பகையாயிருந்தவர்களே. இருவருள் சிலந்தி சோழ மன்னரானார். யானை கயிலையில் கணங்கட்குத் தலைவரானார். முற்பிறவியில் மாலியவானே சிலந்தி, புட்பதந்தனே யானை. சிலந்திக்கு அருள்செய்த திறத்தை, "பூச்சூழ்ந்த" என்னும் பாடலில், "சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத் தரசுகொடுத்தார் போலும்" (தி.6 ப.75 பா.8)என்ற பகுதியில் போற்றி உள்ளமை காணலாம். நன்பாட்டுப்புலவன்: திருவாலவாய்ப் பெருமான், ஆதிசைவ அந்தணனாகிய தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாற்றை அப்பர் திருப்புத்தூர்த் திருத்தாண்டகத்தில் அருளியமை கண்டு மகிழத்தக்கது. அப்பாடற்பகுதி காண்க. "மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட்கு என்றும், விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம்ஏறி, நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன்காண்." (தி.6 ப.76 பா.3). தோத்திரமும் சாத்திரமும்: மெய்யறிவு முதிர்ந்த மெய்யன்பில் விளைவது தோத்திரம்.மெய்யன்பு முதிர்ந்த மெய்யறிவில் விளைவது சாத்திரம். உதாரணமாக, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர், முதலியோர் மெய்யன்பில் விளைந்தனவே தோத்திரம். மெய்கண்டார், அருணந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் முதலியோர் மெய்யறிவில் விளைந்தனவே சாத்திரம். தோத்திரம் என்பது
|