பக்கம் எண் :

286
 

பெங்களூரிலிருந்து விரைவுப் பேருந்துகளில் இத்தலத்தை அடையலாம். தொடர்வண்டியிற் செல்வதாயின் சென்னையிலிருந்து ஹு ப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் இவ்வூரை அடையலாம். துளுவ நாட்டுத்தலம் இது ஒன்றே யாகும்.

இறைவர் திருப்பெயர் மகாபலநாதர். இறைவி திருப்பெயர் கோகர்ணநாயகி. தீர்த்தம் -கோடி தீர்த்தம்.

சிவராத்திரி நாளில் இங்குக் கோடிதீர்த்தத்தில் நீராடி, வழிபாடு செய்தல் மிகச்சிறந்தது என்று சிவராத்திரிபுராணம் செப்புகின்றது. இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று, ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

31. திருக்கோடிகா

பெயர்க்காரணம் புலப்படவில்லை. "இது திரிகோடி அதாவது மூன்று கோடி ரிஷிகள் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர்" அது பொருந்துமாறு இல்லை.

மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப்பாதையில் நரசிங்கன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரி வடகரைத் தலங்களுள் முப்பத்தேழாவது ஆகும். காவிரி வடகரை வழியாக மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் இத்தலம் உள்ளது.

இறைவரது திருப்பெயர் கோடிகாஈசுவரர். இறைவியாரது திருப்பெயர் வடிவம்மை.

தீர்த்தம் சிருங்கதீர்த்தம்.இது கோயிலுக்கு வடபால் உள்ளது.

இவ்வூர்க்குச், சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர்பதிகம் மூன்றுமாக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் முற்காலத்துப் பல்லவர்களில் நந்தி போத்தரையன் விஜய நிருபதுங்க விக்கிரமவர்மன் என்பவர்களுடைய கல்வெட்டுக்களும்,பிற்காலப் பல்லவரில் கோப்பெருஞ்சிங்க தேவர்காலத்துக் கல்வெட்டும், முத்தரையர்களில் இளங்