பக்கம் எண் :

288
 

சிறுநங்கை ஈஸ்வரகாரத்து மகாதேவர்க்குத் திருவிளக்கினுக்கு ஆழிசிறியன் என்பவன் நூறுகலம் நெல்கொடுத்து அதன் வட்டி கொண்டு நாள்வாய் (நாள்தோறும்) உழக்கு நெய்யால் அவ்விளக்கை எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளான். இது நந்தி போத்தரையன் 19 ஆம் ஆண்டுக் கல்வெட்டால் புலப்படுகின்றது. விஜய நிருபதுங்க விக்கிரமவர்மனின் இருபத்துநான்காம் ஆண்டில்,கொண்டநாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வேங்கடவன்,பதினைந்து கழஞ்சு பொன்னை அளித்து, அதன் வட்டிகொண்டு நொந்தாவிளக்கு ஒன்றைத் திருக்கோடிகா மகாதேவர்கோயிலில் எரிப்பதற்காக நாணக்கச்சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடம் ஏற்பாடு செய்திருந்தான். நிருபதுங்கமகாராஜர் தேவியார், வீரமகாதேவியார் இரணியகர்ப்பமும்துலா பாரமும் புகுந்த பொன்னில் திருக்கோடிகா மகாதேவர்க்குஐம்பதின் கழஞ்சு பொன்னை அளித்து அவற்றில் இருபத்தைந்து கழஞ்சு பொன்னுக்கு வரும் வட்டி கொண்டு நாடோறும் இருநாழி அரிசியும் ஒருபிடி நெய்யும் திருவமுதுக்கும்,நாடோறும் உழக்கு நெய் கொண்டு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.மெழுக்குப் புறத்துக்கு நிலம் விடப்பட்டிருந்தது.

வடகரை நல்லாற்றூர் நாட்டு, ஆரூர் உடையான் அருளாக்கி சேந்தன் இந்நாட்டுக் கண்ணமங்கலத்துப் புதுவாய்க்காலின் வடக்கே மூன்றுமாவும்,வடகரை அரை மாவும் ஆக மும்மாவரை நிலத்தை, பெண்ணடியார்கள் உண்பதற்கும், ஒருகூறு ஆணடியார்கள் உண்பதற்கும் ஆக ஏற்பாடு செய்திருந்தான். மல்லிநாட்டுக் கிழந்திபெரும் பிடுகுவிஞ்சவயனான நக்கன் நந்தவனத்துக்கும்,நந்தவனம் இறைப்பார்க்கும் ஆக இரண்டுமா நிலத்தைவிலைக்கு வாங்கிக் கொடுத்துள்ளான். நந்தவனம் திருக்கோவிலுக்கு வடபாலுள்ள இடமாகும்.

பழையாற்று நந்திபுரத்து வியாபாரி குமரன் கணபதி என்பான் திருக்கோடி மகாதேவர்க்குத்திருவிளக்கினுக்கும், திருவமிர்தினுக்கும் ஆக எழுபதின் கழஞ்சு பொன் கொடுத்துள்ளான்.

மார்கழித் திருவாதிரைச் சிறப்புக்குக்கூத்தாடும் நாயனார்க்கு உதையஞ்சடையன் உடையான் தில்லையம்பல விழுப்பரையன் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் நிவந்தம் அளித்துள்ளான்.

பரகேசி விக்கிரமசோழன் காலத்தில் தென்கரை உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவாவடுதுறைக்