இத்திருக்கோயிலில் விக்கிரமசோழதேவன், கோனேரின்மை கொண்டான், மூன்றாங் குலோத்துங்க சோழன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், திருபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் ஆகிய இவர்கள் காலங்களில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவ்வூர், இராஜாதிராஜ வளநாட்டு, நாங்கூர் நாட்டு, காவிரிப்பூம்பட்டினத்துத் திருச்சாய்க்காடு எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயில் நிலங்கள் வேறு சிலரால் அநுபவிக்கப் பெற்றிருந்தன. அவைகளைக் கோனேரின்மை கொண்டான் திரும்பப் பெற்று, அவைகளில், இராஜராஜன் திருநந்த வனம் எனத் தன் பெயரால் நந்தவனத்தை ஏற்படுத்தினான். பிள்ளை அம்பர்உடையார் காளிங்கராயர் உத்தரவின்படி இறைவற்குத் திருவமுது உள்ளிட்ட வைகளுக்கும், திருக்கோயிலைப் பழுது பார்ப்பதற்கும், நிலவருவாயில் இவ்வளவு இவ்வளவு நெல் ஒதுக்கப்பட வேண்டுமென்று திட்டம் வகுக்கப்பெற்றது. இது நிகழ்ந்தது மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் முப்பத்தைந்தாம் ஆண்டா கும் இராஜாதிராஜ வளநாட்டு,திருவிந்தளூர்நாட்டு, மருதமங்கலத்து மலைமேல் மருந்தானவானவன் விழுப்பரையன் முன்னரே இத்திருக்கோயிலில் ஒன்றரை விளக்கு (?) எரியும்படி ஏற்பாடு செய்திருந்தான். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் ஐந்தாம் ஆண்டில் இன்னும் அரைவிளக்கு எரிப்பதற்கு நிலநிவந்தம் அளித்துள்ளான். சோழ மன்னரது மந்திரி திருச்சிற்றம்பலவன் ஒரு மடம் ஒன்றைக்கட்டி, அதில் ஐம்பது பிராமணர்கள் உண்பதற்கு நிலம் அளித்திருந்தான். திருச்சாய்க் காட்டூர் சீமைக் காவிரிப்பூம்பட்டின மாகாணத்து காவிரிப்பூம் பட்டினத்தில் பல்லவனேச்சரக் கோயிலுக்குத் திருவிழாவிற்கும், பழுதுபார்ப்பதற்கும் ,நாயராவுத்த முண்டன் முதலானவர்களால் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சகம் 1679 கலியுகம் 4775ஆகும்.1 33. திருச்சிவபுரம் சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம்.தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம். தனபதி அரசன் தன் சாபவிமோசனத்திற்காக ஒரு பிராமணக்குழந்தையை வாங்கித்
1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1912,No.261-273,pages 21-22.
|