அங்கிருந்து கிழக்கே 1.5 கீ.மீ. தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள தலங்களுள் 79 - ஆவது ஆகும். திருவாரூரிலிருந்தும், திருமருகலிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் -கணபதீச்சுரர். இறைவியின் திருப்பெயர் - திருக்குழல்நன்மாது. இப்பெயர், திருகுகுழல் உமைநங்கை. என அப்பர்பெருமானால் ஆளப்பெற்றுள்ளது. மரம் - திருவாத்தி, இது உற்சவமூர்த்தி சந்நிதிக்கு எதிரில் இருக்கிறது. தீர்த்தம் - சூரிய தீர்த்தம். சிறுத்தொண்ட நாயனார் தம் அருங்குடிக்கு ஒரு மகனாகிய சீராளன் என்னும் சிறுவனைப் பயிரவவேடம் பூண்டு வந்த சிவபெருமானுக்குக் கறியமுது ஆக்கி அளித்துப் பிறகு அப்பெருமானுடைய அருளால் அக்குழந்தை உயிர்பெற்ற தலம். சிறுத்தொண்ட நாயனார், அவரது மனைவியார் திருவெண்காட்டுநங்கை, குழந்தை சீராளர் சந்தன நங்கை இவர்களின் பிரதிமங்கள் உற்சவ மூர்த்தி சந்நிதிக்கு எதிரில் இருக்கின்றன. இவ்வூர்த் தெற்குவீதி மேலக்கோடியில் இருக்கும் சிறுத்தொண்ட நாயனார் திருமடமே முற்காலத்தில்அவர் வாழ்ந்த வீடு என்று முதியோர் கூறுகின்றனர். அம்மடத்தில் அமுதுகேட்க எழுந்தருளிய உத்தராபதீசுவரரின் திருமேனி இருக்கிறது. அமுது படையல் திருவிழா ஆண்டு தோறும் சிறப்புற நடைபெற்று வருகின்றது. சிறுத் தொண்ட நாயனார்க்கும், அவரது மனைவியார் முதலானோர்க்கும் அருள்செய்யும்பொழுது இறைவர் மலைபயந்த தையலோடும், சரவணத்துத் தனயரோடும் எழுந்தருளி காட்சியளித்து, அவர்களைத் தம்சேவடிக்கீழ் என்றும் பிரியாது இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகின பெருமைபெற்ற பதி இது. இத்தலத்துப் பதிகத்தில், திருஞானசம்பந்தப் பெருந்தகையார், சிறுத்தொண்டரை, 'செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டன்,' 'கல்நவில்தோள் சிறுத் தொண்டன்' 'சிட்டான் சீர்ச்சிறுத்தொண்டன்' 'தேனமர்தார்ச்சிறுத்தொண்டன்' சீருலாம் சிறுத்தொண்டன், 'செருவடிதோள் சிறுத்தொண்டன்' 'சீராளன் சிறுத்தொண்டன்' சிறப்புலவன் சிறுத்தொண்டன், எனச் சிறுத்தொண்டரையும், அவரது புதல்வர் சீராள தேவரையும் பாராட்டியுள்ளனர். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர்பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு: இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர்களில் இராஜகேசரி
|