பக்கம் எண் :

296
 

தீர்த்தம் காவிரி.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியதாக அரசியலார்படி எடுத்த கல்வெட்டுக்கள் 12 ; எம்.எஸ்.எஸ். எடுத்தன 27 ; வி. ரங்காச்சாரியா எம்.ஏ. அவர்கள் எடுத்தது 25 ஆக 64 கல்வெட்டுக்கள் உள்ளன.

இவை பராந்தகன், இராஜராஜன்I, இன்னான் என்று கணித்தறியமுடியாத கோராஜகேசரி, பரகேசரி, கோநேரின்மை கொண்டான். குலோத்துங்கன் காலத்தன. இவை பெரும்பாலும் சிதைவுற்றிருத்தலின் நிகழ்ச்சிகளை நன்கு அறிந்து கொள்ளக்கூடவில்லை. ஆயினும் விளக்குக்களுக்காகவும், நிவேதனத்துக்காகவும், விழாவிற்காகவும் நிலமும் பொன்னும் அளித்த செய்திகள் குறிக்கப்பெறுகின்றன.

ஒரு கல்வெட்டு நடனமாதிற்குச் சர்வமான்யம் விட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. நலமல்லூர் தேவர்என்பவர் தொலையாச் செல்வருக்கு விளக்குத்தண்டு செய்ய நிலமளித்த செய்தி தெரிகிறது. கடவுள் தொலையாச்செல்வர் என்றும் திருச்சோற்றுத்துறை நாயனார் என்றுங் குறிப்பிடப்பெறுகிறார்.

36. திருத்தலையாலங்காடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குடவாயிலுக்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது.

இறைவர்: ஆடவல்லயீசுவரர்.

இறைவி: திருமடந்தையம்மை.

கபில முனிவர் வழிபட்ட தலம். தாருகாவனத்து இருடிகள் அனுப்பிய முயலகனைக் கீழே கிடத்தி அவன் முதுகின்மீது இறைவன் நடனம் புரிந்த தலம்.

37. திருநல்லூர்

கும்பகோணம் - தஞ்சை தொடர்வண்டிப் பாதையில், சுந்தரப்