பக்கம் எண் :

298
 

இக்கோயில் மாடக்கோயில் அமைப்பு வாய்ந்தது. இத் தலத்தில் வைகாசி மாதத்தில் ஏழூர் விழா நடந்துவருகின்றது. இலிங்கத் திருமேனியில் துவாரங்கள் காணப்படுகின்றன.

அமர்நீதி நாயனார், அவருடைய மனைவியார் இவர்களின் பிரதிமைகள் கற்சிலையிலும் செப்புச்சிலையிலும் இருக்கின்றன.

கல்வெட்டு:

இங்கே இருபத்துமூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்திரண்டு சோழர்களது. ஒன்று முஹாய்சரர் கல்வெட்டு இளங்கோயில் மகாதேவருக்கு விளக்குத்தானம் செய்யப்பட்டது. இளங்கோயில் என்றால் பாலாலயம் ஆகும். உத்தமசோழன் காலத்தில் மானக்குற்றை வீரநாராயணனார் ஸ்ரீ காரியமாக நியமிக்கப்பட்டார்.

இராஜராஜன்I காலத்தில் நாராயணன் ஏகவீரன் ஒரு மண்டபம் கட்டினான். நல்லூருக்கு அப்போது பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றபேர் இருந்தது. வீர ராமநாதன் காலத்தில் அகோரவீரன் கோயிலுக்கு ஒரு பூதானம் செய்தான். விக்கிரம சிங்கதேவன் கோவிலுக்கு ஒரு நிலம் விற்றான். வாணகோவரையன் ஒரு விளக்குத் தானம்செய்தான்.

இராஜராஜன்III நாளில் கல்வெட்டில் கோயிலுக்குச் சேர்ந்த நிலங்களின் வரிசை கூறப்பட்டுள்ளது. அக்காலக் கல்வெட்டு ஒன்றில் தத்தனுடையார் ஈசானதேவர் என்ற ஆசிரியருக்கு அவர் மாணவி தன் கணவர் சொல்படி ஒரு மடம் மானம் செய்தது குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு விளக்குக்களுக்காக 200 காசு தரப்பட்டது. அகம்படி விநாயகப்பிள்ளையாருக்கு வீட்டு நிலமும் தோட்டமும் கொடுக்கப்பட்டன. அகம்படியார் கட்டின வீடும் 8 தென்னைமரங்களும் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன.

38. திருநள்ளாறு

இது நளன் பூசித்த காரணத்தால் இப்பெயர்பெற்றது என்பர்.

பேரளம் - காரைக்கால் தொடர்வண்டிப் பாதையில் திருநள்ளாறு தொடர்வண்டி நிலையத்திற்குஅருகில் இருக்கின்றது.