தலைநகரம். இவ்வூரில் மங்களாசாசனம் பெற்ற திருமால் கோயில் சௌந்தரராஜப்பெரும தலைநகரம். இவ்வூரில் மங்களாசாசனம் பெற்ற திருமால் கோயில் சௌந்தரராஜப்பெருமாள் என்ற பெயரால் விளங்குகிறது. மேலும் மேலைக்கயா என்ற சட்டநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. மற்றும் காவல் தெய்வமாகிய கோதண்ட ஐயனார் கோயில், அமர்ந்தீசர்கோயில், மலைச்சுரம் கோயில் (கயிலாயநாதர்) (இதுஒரு கட்டு மலை,) குமரர் கோயில், நடுவண் நாதர்கோயில், அழகியநாதர் கோயில் முதலிய பல கோயில்கள் இருக்கின்றன. திருக்கோயில் 180 மீ. - 75 மீ. கொண்டது. இராஜகோபுரம் முற்றுப்பெறவில்லை. உட்கோபுரம் 3 அடுக்குக் கொண்ட சோழன் கோபுரம். மடைப்பள்ளிக்கெதிரில் அதிபத்தர் திருவுருவம் உள்ளது. மாமரம் தலமரம்.அதனடியில் மாவடிப்பிள்ளையார் இருக்கிறார். இராசதானி மண்டபத்தில் தியாகராசர் இருக்கிறார். சுந்தரவிடங்கர் சுவாமி பெயர் காரோணர் என்பது காயாரோகணர் என்பதன் மரூஉ. புண்டரீகரிஷியை சரீரத்தோடு ஏற்றுக்கொண்டதனால் காயா ரோகணர் என்று வந்ததாகப் புராணம் கூறும். நீலாயதாட்சி என்ற வடமொழிப்பெயர் கருந்தடங் கண்ணி எனத் தமிழில் வழங்கும். இது சக்தி பீடங்கள் அறுபத்து நான்கில் ஒன்று. மாடங்களில் சிற்பவேலை அழகாக இருக்கிறது. இவ்வூர்த்தேர் கண்ணாடி ரதம் அல்லது பீங்கான் ரதம் என வழங்கும். கல்வெட்டு: ஏழு கல்வெட்டுக்கள் வெளியிடப் பெற்றுள்ளன.கயிலாச நாதர் கோயில் சுவரில் கி.பி. 1777 - ல் ஒருகனவான் இறந்ததாக ஒல்லாந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது. சீனா கோபுரத்தில் கிடைத்த ஒரு வெண்கலச்சிலையில் 12ஆம் நூற்றாண்டு எழுத்து இருந்தது. ஒரு சிறு கோயிலில் கி.பி.1777-ல் கவர்னர் ரெய்னர்வான் விலிசிங்கன் அதனைக் கட்டினதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய முரசின் பேரில் ஒரு சிறு எழுத்து உண்டு. ஒரு வெள்ளி ஏட்டில் தஞ்சை அரசன் விஜயராகவன் நாகப்பட்டினத்தை ஒல்லாந்தருக்குக் கொடுத்ததாக எழுதியிருக்கிறது தெலுங்கு வரிவடிவத்தில். மற்றொரு வெள்ளி ஏட்டில் தமிழில் அதனையே மராட்டியர் கோறி கி.பி. 1676 இல் உறுதிப்படுத்தி எழுதினர். கி.பி. 1774 இல் ஒல்லாந்த தேவாலயம் கட்டப்பெற்றது. ாள் என்ற பெயரால் விளங்குகிறது. மேலும் மேலைக்கயா என்ற சட்டநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. மற்றும் காவல் தெய்வமாகிய கோதண்ட ஐயனார் கோயில், அமர்ந்தீசர்கோயில், மலைச்சுரம் கோயில் (கயிலாயநாதர்) (இதுஒரு கட்டு மலை,) குமரர் கோயில், நடுவண் நாதர்கோயில், அழகியநாதர் கோயில் முதலிய பல கோயில்கள் இருக்கின்றன.திருக்கோயில் 180 மீ. - 75 மீ. கொண்டது. இராஜகோபுரம் முற்றுப்பெறவில்லை. உட்கோபுரம் 3 அடுக்குக் கொண்ட சோழன் கோபுரம். மடைப்பள்ளிக்கெதிரில் அதிபத்தர் திருவுருவம் உள்ளது. மாமரம் தலமரம்.அதனடியில் மாவடிப்பிள்ளையார் இருக்கிறார். இராசதானி மண்டபத்தில் தியாகராசர் இருக்கிறார். சுந்தரவிடங்கர் சுவாமி பெயர் காரோணர் என்பது காயாரோகணர் என்பதன் மரூஉ. புண்டரீகரிஷியை சரீரத்தோடு ஏற்றுக்கொண்டதனால் காயா ரோகணர் என்று வந்ததாகப் புராணம் கூறும். நீலாயதாட்சி என்ற வடமொழிப்பெயர் கருந்தடங் கண்ணி எனத் தமிழில் வழங்கும். இது சக்தி பீடங்கள் அறுபத்து நான்கில் ஒன்று. மாடங்களில் சிற்பவேலை அழகாக இருக்கிறது. இவ்வூர்த்தேர் கண்ணாடி ரதம் அல்லது பீங்கான் ரதம் என வழங்கும். கல்வெட்டு: ஏழு கல்வெட்டுக்கள் வெளியிடப் பெற்றுள்ளன.கயிலாச நாதர் கோயில் சுவரில் கி.பி. 1777 - ல் ஒருகனவான் இறந்ததாக ஒல்லாந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது. சீனா கோபுரத்தில் கிடைத்த ஒரு வெண்கலச்சிலையில் 12ஆம் நூற்றாண்டு எழுத்து இருந்தது. ஒரு சிறு கோயிலில் கி.பி.1777-ல் கவர்னர் ரெய்னர்வான் விலிசிங்கன் அதனைக் கட்டினதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய முரசின் பேரில் ஒரு சிறு எழுத்து உண்டு. ஒரு வெள்ளி ஏட்டில் தஞ்சை அரசன் விஜயராகவன் நாகப்பட்டினத்தை ஒல்லாந்தருக்குக் கொடுத்ததாக எழுதியிருக்கிறது தெலுங்கு வரிவடிவத்தில். மற்றொரு வெள்ளி ஏட்டில் தமிழில் அதனையே மராட்டியர் கோறி கி.பி. 1676 இல் உறுதிப்படுத்தி எழுதினர். கி.பி. 1774 இல் ஒல்லாந்த தேவாலயம் கட்டப்பெற்றது.
|