நிவந்தத்திற்காகப் பொருள் இல்லாமையினால் ஆண்டு ஒன்றுக்கு 540 கலம் நெல் தரக்கூடிய நிலதானம் விக்கிரம சோழனால் தரப்பட்டது. குற்றம் தீர்த்த தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. பசு திருடியதைச் சபையோர் விசாரித்து அவனிடமிருந்து பசுவும் கன்றுகளும் மீட்கப்பெற்றன. கோப்பெருஞ்சிங்கன் கி.பி.1250 இல் 60மா, நிலம் விற்கப்பெற்றது. 42. திருநெய்த்தானம் சோழநாட்டுத்தலம். தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றிற்கு மேற்கே 1.5. கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்று சப்தஸ்தான க்ஷேத்திரங்களில் ஏழாவது தலம். இங்கே கலைமகள் வழிபட்டுப் பேறுபெற்றாள். சுவாமிபெயர் நெய்யாடியப்பர். அம்மைபெயர் பாலாம்பிகை. 'இளமங்கையம்மை' எனத் தேவாரம் குறிப்பிடுகின்றது. தீர்த்தம் - காவிரி. கிழக்குப்பார்த்த சந்நிதி. இப்போது தில்லைஸ்தானம் என வழங்குகின்றது. வடமொழியில் கிருதஸ்தான மாயிற்று. இறைவற்குப் பசுநெய் அபிக்ஷேகிப்பது வழக்கம். கல்வெட்டு: இத்தலத்தில் அரசியலார் படிஎடுத்தவண்ணம் 51 கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இத்தலம் இராஜாதிராஜன் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பைங்காநாட்டுத் திருநெய்த்தானம் எனக் குறிக்கப்பெறுகின்றது. இத்தலத்து பராந்தகன்I முதலாக ஐந்துசோழ அரசர்களின் தானங்களைக் குறிக்கும் நிகழ்ச்சிகளும், நந்திவர்மன் தான நிகழ்ச்சிகளும் குறிக்கப்பெறுகின்றன.செம்பியன் ஈக்காட்டு வேளானான பரிசைகிழான் மறவன்நக்கன் என்பவன் 13 கழஞ்சு பொன்னைக்கோயில் விளக்கிற்காகக் கொடுத்தான்1. கூத்தன் அருள்மொழியான வானவன் பேரரையன் நிலத்தை 25 கழஞ்சுபொன்னுக்கு நங்கை வரகுணபெருமானார் வாங்கி விளக்கிற்காக வைத்தாள் 1. சாமர கேசரி தெரிஞ்சகைக்கோளர், விக்ரமசிங்க தெரிஞ்ச கைக்கோளர், இருவராலும் பைங்காநாட்டுக் கீழப்பிலாறு கிராமத்தில் நிலம் அளிக்கப் பெற்றது. முற்கூறிய சாமரகேசரி தெரிஞ்ச கைக்கோளருள் ஒருவனான மல்லன் ஆரியனால் நிவந்தம் விடப்
1-277 of 1911
|