பக்கம் எண் :

307
 

பெற்றது. கோயில் காரியத் தலைவனான காமக்கோடநல்லூர் ஆயனால் இரு பொன்பட்டங்கள் கடவுளுக்குக் கொடுக்கப்பெற்றன2. சோழப் பெருமானடிகளுடைய காமக் கிழத்தியான நங்கை கூத்தப் பெருமானார் 30 கழஞ்சு பொன்னை விளக்குக்காக வைத்தார். அதனைத் திருநெய்த்தானச் சபையார் சுவாமிக்கு ஸ்நபன மண்டபங்கட்டப் பயன்படுத்திவிட்டனர். அதற்குப் பதிலாகக் கோயில் நிலங்கள் சிலவற்றை ஏற்பாடு செய்தனர். வளவர்கோன் பேரரையன் என்பவனும், செம்பியன் தமிழவேளான் விக்கணன் மனைவி கடம்பமா தேவியும், தென்னவன் பிரதிமாராசனான கட்டி ஒற்றியூரான் பராந்தகனும், இளங்கோவேண்மான் மனைவியான வரகுணப் பெருமானாரும் விளக்கிற்காகப் பொன்னும், நிலமும் அளித்தனர். முண்டங்குடி உடையானான கண்ணங்குடி நாராயணன் நைவேத்யத்திற்கு நெல்லளித்தான். இது அளித்தகாலம் பராந்தகன்Iகாலம். மேளக்காரன், தேவதாசி, வாணிகன் இவர்கள் தருமமும் விளங்கின என்பதை மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன 3. கோப்பர கேசரியான பராந்தகன்Iக்கு மாமியார் முள்ளூர் நங்கையென்று தெரிகிறது. 4

43. திருப்பந்தணைநல்லூர்

இறைவி ஆடிய பந்துவந்தணைந்த ஊர் என்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் குத்தாலம் தொடர் வண்டி நிலையத்திற்கு வடமேற்கு 9 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

இறைவர் திருப்பெயர் - பசுபதீசுவரர். இறைவியின் திருப்பெயர் - காம்பன்னதோளியார். இப்பெயர் "காம்பேய்தோளி பற்றாகும் பாகத்தார்" என இவ்வூர்ப்ப பதிகத்தில் அப்பர் பெருமானால் எடுத்தாளப்பெற்றுள்ளது. மரம் - கொன்றை.

தேவகன்னியர்களும் காமதேனுவும் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இத்தலத்திற்கு இருக்கின்றன.

கல்வெட்டு:

இவ்வூர்ச்சிவன் கோயிலில் சோழமன்னர்களில், முதலாம்


2-283 of 1911, 3-22, 33, 36 of 1895, 4-45 of 1895.