"நாலங்க வாளிபெற்றார் நாரியரே பாரியினு | மேலங்க மான கொடைவேளான் - காலிங்க | னெல்லனுக் கேபெறுமோ விந்திரநீ லங்கருப்பு | வில்லன்கைக் கேபெறுமோ மீன்" |
44. திருப்பழனம் சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருவையாறு பேருந்துச்சாலையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. இது திருவையாற்று ஸப்தாஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாயதிங்களூர் இதற்கு அண்மையில் இருப்பதால் இங்கு வழிபடவந்த அப்பர் அடிகள் இத்தலப் பதிகத்து அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்து அருளிச்செய்தார்கள். விடந்தீர்த்த பதிகமாகிய "ஒன்றுகொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமானதலம் இது. இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் - காவிரி. கல்வெட்டு: இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. இவைகளும் முதற்பராந்தகன் காலமுதற்கொண்டே தொடங்குகின்றன. இவற்றால் அரசர்களும் அரசியர்களும், அவர்களது தோழிமார்களும், தண்டத் தலைவர்களும் விளக்கிற்காக நிலமும் நெய்யும், பொன்னும் வழங்கியமை அறியலாம். திரிபுவன வீரதேவனான மூன்றாம் குலோத்துங்கன் சிந்திநல்லூரில் உள்ள நிலங்களை 15500 காசுகளுக்கு விற்று, அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். இராஜராஜன் மூன்று காணி ஒரு முந்திரி நிலம் அளித்தான் என்பதால் அரசர்களின் அன்பின் நுணுக்கம் அறியப்பெறுகிறது.கோஇராஜகேசரிவர்மன் காலத்தில் ஒரு வேளாளன் கல்மண்டபம் ஒன்றை எழுப்பித் தந்தான். 45. திருப்பள்ளியின்முக்கூடல் நாகை மாவட்டத்தில் திருவாரூர்க்கு வடக்கிலுள்ள விற்குடி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர்
|