கல்வெட்டுக்கள் 51 உள்ளன. இறைவன் திருப்பெயர் திருக்கற்றளிப்பட்டாரர்; 1 ஸ்ரீதளி பரமேஸ்வரர் 2, திருத்தளி உடைய பரமேஸ்வரர், திருத்தளி ஆண்ட நாயனார் 3, என வழங்கப்பெறுகின்றார். அம்மை திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் 4, திருப்பள்ளிறை நாச்சியார் எனவும் வழங்கப்படுகின்றார். இவர்களேயன்றிக் கோயிலுக்குள்ளே கைலாச முடைய நாயனார் 5, அகஸ்தீஸ்வரம் உடையார் 6 கோயில்களும் இருந்தனவாக அறியப்படுகின்றன. பைரவர் கோயில் மிகப் பிரசித்தமானது 7. விஜயநகரத்தை அரசாண்ட வீரப்பிரதாப அச்சுததேவ மகாராயர் நன்மைக்காகப் பெரிய ராமப்ப நாயக்கரால் பைரவருக்கு நிலம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைப்பற்றிய குறிப்புக்கள் விஜய நகர அரசர்கள் கல்வெட்டுக்களில் இதற்கு முந்தியதில் இல்லை. கைலாசமுடைய நாயனார் கோயில் தேவரடியாளான ஒருத்தி திருநாவுக்கரசு நாயனார் படிவத்தைப் பிரதிஷ்டை செய்யவும், நைவேத்தியத்திற்காகவும் பொன் அளித்த செய்தியைத் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் 12-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று காட்டுகின்றது8. கோவில் அடியாளுக்கிருந்த அடியார் பக்தி என்னே! திருஞானசம்பந்தர் திருமடமும்9 திருத்தொண்டத்தொகைத் திருமடமும்10 சைவமடம் ஒன்றும் இருந்தன. இவற்றுள் திருஞானசம்பந்தர் திருமடத்தில் ஸ்ரீகண்ட சிவாச்சாரியர் இருந்ததாகவும் சோழதேசத்தில் இருந்த நிலத்தை விற்று அவருக்குக் கொடுக்கப் பெற்றதென்றும் அதே கல்வெட்டு அறிவிக்கின்றது. இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தர பாண்டியன் I (கி.பி.1214-35) காலத்தது. இவையன்றிக் கிராம தேவதைகளாக அங்காளம்மன் கோயில்11, நின்ற நாராயணப்பெருமாள்கோயில் 12 இவைகளும் திருப்புத்தூர் கிராமங்களில் இருந்தனவாகக் குறிக்கப்படுகின்றன. பெருமாள் கோயில், திருத்தளி உடையார்கோயிலிலேயே இருந்ததாகக் குறிக்கப் பெறாமை ஊன்றி அறிதற்குரியது. இத்தலத்து நிகழ்ச்சிகள் யாவும் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இராஜேந்திரசோழ கேரளனான நிச்சலராஜனால் கேரளசிங்க வளநாட்டில் விளக்கிற்காக 50 ஆடு
1-90 of 1908, 2-93 of 1908, 3-99 of 1908, 4-123 of 1908, 5-114 of 1908, 6-130 of 1908, 7-121 of 1908. 8-117 of 1908, 9-129 of 1908, 10-6 of 1908, 11-138of 1908, 12-140 of 1908.
|