கைலாசமலைநாதர் கோயில் திருவிழாவிற்காகச் சம்வத்சர வாரியமாக வரி தள்ளுபடி செய்தமை குறிக்கப்பெற்றுள்ளது. தயாபஞ்சகம் என்றழைக்கப்படும் மண்டபத்தில் மூலச்சபையார் கூடிச் சில கொடுக்கல் வாங்கல்கள் செய்த செய்தியும், திருத்தொண்டத் தொகையான் திருமடமும் குறிக்கப்பெறுகின்றன. சோழபாண்டிய வளநாட்டு குலசேகரநாட்டுப் பிராமணி ஒருவனால் கோயிலில் நான்கில் மூன்று பங்கு விளக்குக்களை ஏற்றப் பொன் வழங்கப் பெற்றது. கண்டிய தேவரால் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாரை மருந்து சாத்திப் பிரதிஷ்டைசெய்யத் தம்முடைய நிலக்குடிவார உரிமை விற்றுக் கொடுக்கப்பட்ட செய்தி அறியப்பெறுகிறது1, கோயில் கணக்கர்களால் தவறிழைக்கப்பெற்ற கோயில் நிலங்களைத் திரும்பவும் அளந்து கட்டி மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்கியதாக இவனுடைய 23 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கிறது. தேவர கண்டன் மனைவியான அவனிமுழுதுடையாளால் திருமஞ்சன தீர்த்தத்திற்காக நான்கு தண்ணீர்ப் பானைகள் அளிக்கபெற்றன. மாறன்சடையன்: இவன் காலத்தில் 40 கழஞ்சு பொன் அளிக்கப்பெற்ற செய்தி அறிவிக்கப்பெறுகிறது2. நாகராஜதேவன் I (கி.பி. 985 - 1013) திருப்புத்தூர் சபையார் உறங்காப்புளி அடியில்கூடி ஏதோ தீர்மானித்ததாகத் தெரிகிறது. சிதிலமாதலின் முழுவரலாற்றுக் குறிப்பும் தெரியவில்லை3 வீரபாண்டியன்: திருத்தொண்டத் தொகைத் திருமடத்திற்குத் திருப்புத்தூர்ச் சபையார்கூடி இறையிலிசெய்ததை அறிவிக்கிறது. தயாபஞ்சகம் என்னும் மண்டபத்தைத் திருப்பணிசெய்த வரலாறும் குறிக்கப் பெறுகிறது. தேனாற்றுப் பாசனமான கொறைக்குடியான் அவையன் பெரிய நாயனாரான விசயாலய தேவனால், யவனர்கள் ஆக்கிரமித்த கோயிலை வென்று திரும்பவும் பெற்றுப் புனிதப்படுத்தப்பெற்றது. இது நடைபெற்ற நாள் 2-8-1339 திங்கட்கிழமை என்று எபிகிராபிகா இண்டிகா பகுதி 11 பக். 138 கூறுகிறது. 2-12-1339 இல் அவையன் சொரக்குடி மாளவச்சக்ரவர்த்தியினால் பாடிக்காவல் உரிமைகள் விற்கப்பெற்றன. சில கோயில் நிலங்கள் அருச்சகருக்கு மானியமாக அளிக்கப்பெற்றன4. விஜயநகர அரசரான கிருஷ்ணப்பதேவமகாராஜன் காலத்து
1-123 of 1908, 2-90 of 1908, 3-105of 1908, 4-128 of 1908.
|