நீங்கப்பெறுவர். சூரியன், செவ்வாய், இராமலக்குமணர், அநுமார் முதலானோர் வழிபட்டுப் பேறு எய்தினர். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்னும் திருப்பெயருடன் விளங்கி, அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து வருகிறார். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று. நாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. வடுகநாத தேசிகர் எழுதிய தலபுராணமும், குமரகுருபரர் அருளிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் அச்சில் வெளி வந்துள்ளன. இவைகளன்றி மூவர் அம்மானை முதலான பல நூல்களில் இத்தலத்துச் சிவபெருமானைப்பற்றிய புகழ்ப் பாக்கள் இருக்கின்றன. சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்தி. "தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் | புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே" | -தி.2 ப.43 பா.1 |
என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப்பகுதியால் அறியக்கிடக்கின்றது. சம்பாதி, புள்ளிருக்கு வேளூர் இறைவனை வழிபடற்குக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாளும் பூக்கொண்டுவந்த செய்தி, "யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளுமொழியாமே | பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே" | -தி.2 ப.43 பா.3 |
என்னும் அவரது தேவாரப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பாதி வனம் மணிமேகலையுள்ளும் கூறப்பட்டுள்ளது. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு பொருது, சடாயு உயிரிழந்த செய்தி, "மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப் | பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே" | -தி.2 ப.43 பா.2 |
|