இத்தலத்தாணடகமாகிய "பிறப்பானை" என்ற பாடலில் "நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன் தன்னை" என்றருளியுள்ளமை காண்க. பெருமான், "நலமிலன் நண்ணார்க்கு, நண்ணினர்க்கு நல்லன், சலமிலன் பேர் சங்கரன்" (திருவருட்பயன், 9) என்னும் நடுவுநிலையையும் சுகத்தையும் செய்வதே அவன் தொழில் என்பதையும் உணர்வோமாக. அற்றார்கட்கு அற்றான்: சிவபெருமான் பற்றற்ற பரம்பொருள். அவனைத் திருவள்ளுவர்"பற்றற்றான்" (குறள் 350) என்கிறார். "வேண்டுதல் வேண்டாமைஇலான்" (குறள் 4) என்கிறார். ஞானசம்பந்தர். "அற்றவர்" (தி.3ப.120 பா.2) என்கிறார். இங்ஙனம் பற்றற நிற்கும் பரம்பொருளாகிய சிவனே நம்மையெல்லாம் பற்றி நம்மிடையே உள்ள பற்றை அகற்றி பற்றற்ற நிலையில் உள்ள உயிர்களைத் தம்முடனே ஒன்றாக ஆக்கிக்கொள்கிறான் .இதனையே அற்றார்கட்கு அற்றான் என்கிறார் அப்பர் அடிகள். திருக்கோடிகா திருத்தாண்டகமாகிய "மற்றாரும் தன்னொப்பார்" என்னும் பாடல் மூன்றாம் அடியில் "அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்"(தி.6 ப.81 பா.4) என்று பேசுகிறது. தூய பொருளோடு அழுக்குப்பொருள் சேர இயலாது.எனவேதான் தூய்மையாக இருக்கின்ற பரம்பொருளோடு தூய்மையாக இருக்கின்ற உயிரே சேர இயலும். எனவேதான் இதே கருத்தை ஞானசம்பந்தரும் "அற்றவர்க்குஅற்ற சிவன் உறைகின்ற ஆலவாயாவது மிதுவே" (தி.3 ப.120 பா.2) என்றருளினார். தூய்மை தூய்மையோடு சேர்வதே இயல்வு என்பதை, இதனால் அருளினார்."நினைப்பார் தம் வினைப்பாவம் இழிப்பான் கண்டாய்" (தி.6 ப.81 பா.5)என்றும், ஆறாம் பாடலில், "பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.81 பா.6) என்றும் அருளியிருப்பனவும் இக்கருத்திற்கு அரண் செய்வனவாயுள்ளன. உருகுமனத்து அடியார்: மனம் உருகி வழிபடுதல் பத்தர்களுக்கு உரிய சிறப்பு இலக்கணம் .அத்தகையவர்களின் உள்ளத்தே தேனாகச் சுரந்து, இனிமை தருகிறான் இறைவன்.இதனை அப்பர் திருச் செங்காட்டங்குடி தாண்டகம் ஒன்றில், "உருகுமனத் தடியவர்கட்கு ஊறும் தேனை" (தி.6 ப.84 பா.3) என்று
|