பக்கம் எண் :

321
 

பேருந்து வசதி உள்ளது.

இறைவரது திருப்பெயர் புறம்பயநாதர்; சாட்சிநாதர். ஒரு வணிகப்பெண்ணின் நிமித்தம் இவ்வூர்ச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி கூறினமையால் சாட்சிநாதர் எனப் பெயர் பெற்றார். இறைவியாரது திருப்பெயர் கரும்படுசொல்லி. இத்திருப்பெயரை, (தி. 2 பதி. 196. பா.5) ஞானசம்பந்தப் பெருந்தகையார். "ஓர் பாகம் கரும்பொடு படு சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்" என்று எடுத்தாண்டுள்ளது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும். கரும்படு சொல்லி என்பதற்குக் கரும்பை வென்ற சொல்லை உடையவள் என்பது பொருள்.

தீர்த்தம், பிரம தீர்த்தம். இது இராஜகோபுரத்திற்கு வட கிழக்கில் இருக்கின்றது.

சத்தசாகர தீர்த்தம்: இது பிரமதீர்த்தத்திற்குக் கிழக்கில் நந்தவனத்தில் இருக்கிறது. பிரளயகாலத்தில் அழிக்கவந்த ஏழுகடல்களும் இதனுள் அடங்கி, இருக்கின்றன என்று புராணம் கூறுகின்றது.

மண்ணியாறு: இது ஊரின் கிழக்கே இருக்கிறது.

கொள்ளிடப்பேராறு: இது ஊருக்கு வடபால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

தலவிருட்சம் புன்னை. இது முதல் பிராகாரத்தில் வட மேற்கில் இருக்கின்றது.

சனகர் முதலிய நால்வர்களுக்குச் சிவபெருமான் இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார். இச்செய்தியை, இவ்வூர்ப்பதிகத்திலுள்ள, "நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்" (திருப்பாட்டு 1) என்னும் ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியால் அறியலாம். இத்தலத்தில், தன் தங்கை மகளுடன் வந்தடைந்த காவிரிப் பூம்பட்டினத்து வணிகன் அரவு கடித்து இறந்துபோக, சிவபெருமான் அவனுக்கு உயிர் அளித்ததோடு அவனுக்கு அப்பெண்ணைத் திருமணம் புரி வித்தார். அப்பெண் மதுரையில், அவளது கணவனின் முதல் மனைவி யால் பழிக்கப்பெற்றபோது வன்னி, கிணறு, மடைப் பள்ளி இவை களோடு சென்று சாட்சி பகர்ந்தார். திருக்கோயிலுக்கு நாளும் விறகு கொண்டுவந்த ஒரு ஆதித்திராவிடற்கு வீடு பேற்றை அருளினார். துரோணர் இறைவரை வழிபட்டு அசுவத்தாமா என்ற புதல்வனைப் பெற்றார். விசுவாமித்திரர், சுக்ரீவன் வழிபட்டும் பேறு