1918 இல் படியெடுக்கப்பெற்றன. இறைவன் சிவலோகமுடையநாதர் என்று வழங்கப்பெறுகின்றார் 1. இராஜராஜன் ஆட்சி 11ம் ஆண்டில் சிவலோகமுடையார் கோயிலிலேயே வடக்கு இரண்டாம் பிராகாரத்து விக்கிரம சோழீச்சுர முடைய நாயனார் கோயிலைக்கட்ட விக்கிரம சோழனான வயநாட்டரையன் மருதூர் உடையான் நிலமளித்து இருக்கிறான் 2. கோப்பெருஞ்சிங்கன் 2 ஆம் ஆண்டில் இத் தலம் இராஜாதிராஜவளநாட்டு திருவாலிநாட்டுத் திருப்புன்கூர் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டிய குலாசனி வளநாட்டுக் கீழையூர் நாட்டுக் குறிச்சியான் ஒருவன் சிவலோகமுடைய மாதேவர் திரு மஞ்சனத்திற்கும் திருமாலைக்குமாக நிலமளித்திருக்கிறான் 3. ஏனைய கல்வெட்டுக்கள் விளக்கிற்காக நிலமளித்த செய்தியை அறிவிப்பன. 52. திருப்பூந்துருத்தி இத் தலம் தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்கு மேற்கே 3. கி.மீ. தொலைவிலுள்ளது. சோழ மன்னன் துருத்தியை வைத்துப் பூசிக்கச் செய்ததனால் திருப்பூந்துருத்தி என்று பெயர் வந்ததென்று கூறுவர். ஆற்றிடைக் குறையில் உள்ள பகுதியைத் துருத்தி என வழங்குவது உண்டு. இது திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. இறைவர்: புஷ்பவனநாதர். இறைவி: அழகார்ந்தநாயகி; சுந்தரநாயகி . இங்குத் திருஞானசம்பந்தப் பெருமான் இறைவனை வழிபடுவான் வேண்டி இவ்வாலய நந்திகள் விலகியனவாகக் கூறுவர். இத் தலம் தேவேந்திரன், காசிப முனிவர், சோழன் முதலானோர் பூசித்த பெருமையுடையதாகும். இது திருநாவுக்கரசு பெருந்தகையார் திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு எழுந்தருளியிருந்து பல்வகைத் தாண்டகங்களையும் திருவங்கமாலையுள்ளிட்ட பல பதிகங்களையும் அருளிய பெருந் தலமாகும். இத் தலத்தில் இவ்வாறு அப்பர் பெருமான் இருந்தபோது பாண்டிநாட்டிற்குச் சென்று வல்லமணரை வாதில் வென்று
1-411 of 1918, 2-412 of 1918, 3-411 of 1918.
|