பக்கம் எண் :

346
 

இதற்குள் ஞானசம்பந்தரும் அங்கு எழுந்தருள, அப்பர், "கதவைத் திறக்கப்பாடிய என்னினும், செந்தமிழ் உறைப்புப் பாடி அதை அடைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளியுள்ளார். அவர்க்குக் காட்சியை அளிக்கவாவது வெளிப்பட்டருள வேண்டும்" என்றுபாட அவ்வாறே வாய்மூர் இறைவர் காட்சி தந்தருளினார்.

இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர் பதிகங்கள் இரண்டும், ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சுந்தரரும் "வாய்மூர் மணாளனை" என்கின்றார்.

63. திருவீழிமிழலை

நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. மயிலாடு துறை - திருவாரூர் இருப்புப்பாதையில் பூந்தோட்டம் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.

சோழவளநாட்டில் காவிரித்தென்கரையில் விளங்கும் 61ஆவது தேவாரத்தலம்.

இத்தலம் காத்தியாயன மகரிஷியின் யாகத்தில் தோன்றிய உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடும் இருக்கும் தலம். திருமால் சக்கரம் பெறும் பொருட்டு, நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூவைக்கொண்டு அர்ச்சிக்க, ஒருநாள் ஒரு மலர் குறைய, அதற்காகத் தமது தாமரைமலர் போன்ற கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்துச் சக்கரம் பெற்றதலம். திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகளும் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியதலம். இத்தலத்து வடக்குவீதியில் அப்பர் சம்பந்தர் திருமடங்கள் தனித்தனியே இருக்கின்றன. மூவர் அருளிய 23 பதிகங்களும், சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரி நாதரின் திருப்புகழும் உள்ளன.

விமானம்:

விண்ணிழி விமானம். இது விஷ்ணுவால் தாபிக்கப் பெற்றது. மூலத்தானத்துக்குப் பின் பார்வதி பரமேசுவரரது திரு உருவங்கள்