பக்கம் எண் :

347
 

உள்ளன. இங்குக் காழிக்கோலத்தைச் சம்பந்த மூர்த்திக்கு இறைவன் காட்டியருளினார்.

விழா:

சித்திரைத்திங்களில் பெருவிழா நிகழும். மணக்கோலத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. மணவாளப் பெருமான் திருவடியில் திருமால் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளம் இன்றும் இருக்கிறது. சுவாமி நேத்திரார்ப்பணேசர்; வீழியழகர் எனவும் வழங்கப் பெறுவர். அம்மை சுந்தரகுசாம்பிகை.

தீர்த்தம்:

விஷ்ணு தீர்த்தம்.

தலவிருட்சம்:

வீழிச்செடி.

கல்வெட்டு:

இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்கள் 68. வீழிமிழலை என்றே இத்தலம் வழங்கப்பெறுகின்றது. முதற் குலோத்துங்கன் காலத்து உலகுய்யக்கொண்ட சோழவளநாட்டு வேணாட்டுப்பிரமதேயம் திருவீழிமிழலை என வழங்கியது. சுவாமி பெயர் வீழிநாதர், வீழிமிழலைநாதர் என்பன. கோயில் பிராகாரத்தில் சிலரால் பிரதிட்டை செய்யப்பெற்ற நின்றருளிய நாயனார், நெறிவார்குழலி நாச்சியார், திருவேட்டீஸ்வரமுடைய மகாதேவர், திருவேகம்பமுடையார்1, பார்வதீஸ்வரமுடையார்2, திருத்தண்டூன்றிய மகாதேவர்3 கோயில்களும் பிரதிட்டிக்கப்பெற்ற இடங்களும் குறிக்கப்பெறுகின்றன4. அம்மை, காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப் பெறுகிறார். திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்திருந்தன. முன்னிருவருடைய மடங்களும் வடக்குவீதியில் இருந்தன என்பதும் அறியக் கிடக்கின்றன.

ஆதித்தன் மகனாகிய முதற்பராந்தகன் காலத்திலிருந்து பதி


1-417of 1908,2-418 of 1908, 3-436 of 1908, 4-392 of 1928.