பக்கம் எண் :

348
 

னொரு சோழமன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்களும், சடாவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியதேவன் கல்வெட்டுக்களும் விஜயநகர பரம்பரையைச்சேர்ந்த விருப்பண்ண உடையார் கல்வெட்டு ஒன்றும், பெயரறியப்பெறாதன பதினான்குமாக அறுபத்தெட்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இராஜேந்திர சோழன் திருவீழிமிழலை வடக்கு வீதியிலுள்ள திருநாவுக்கரசர் திருமடத்திற்கு நிலம்விட்ட செய்தி அறியப்படுகிறது1. மூன்றாம் இராஜராஜன் திருவீழிமிழலைக் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் திருவாதவூரர் மாணிக்கவாசகர் படிமத்தைப் பிரதிஷ்டை செய்தான்2. சடாவன்மன் சுந்தரபாண்டிய தேவன் திருக்கை கொட்டித் திருப்பதியம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான்3. முதல் இராஜராஜ சோழன் காலத்தில் ஐப்பசி ஓணத் திருவிழா தரிசனத்திற்காக வரும் அன்பர்களுக்கு அன்னம் வழங்கக் காசு அளிக்கப்பட்ட செய்தியும் இவ்விழா மிகச் சிறப்பாக நடை பெற்றமையும் அறிவிக்கும்4. முதற்குலோத்துங்கன் தமது ஆட்சி முப்பத்து நான்காம் ஆண்டில் சண்டேஸ்வரப் பிரதிஷ்டை செய்வித்து நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்தான்5. சிறந்த செய்தியொன்று வாணியின் பாதனான அரிகுல கேசரி விழுப்பரையனால் 'ஸ்ரீ காலகாலன்' என்னும்வாள், வீழிமிழலை நாதர்க்கு வழங்கப்பெற்றுது. 6

7 மாப்பிள்ளைச்சாமி எனப்பெறும் மணவாளத் திருக்கோலப் பெருமான் அழகிய மணவாளப்பெருமான் என்று குறிக்கப் பெறுகின்றார். இந்த மூர்த்தியையும், இராஜேந்திர சோழ அணுக்கப் பல்லவரையர் புதுக்கிப் பிரதிட்டை செய்ததாகத் தெரிகிறது.

திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

64. திருவெண்காடு

ஆக்கூரிலிருந்து சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம் அல்லிவிளாகத்தில் இறங்கிக் கிழக்கே 4.5 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

இது காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.


1-402 of 1908, 2-409 of 1908, 3-414 of 1908, 4-422 of 1908, 5-427 of 1908, 6-438of 1908, 7-444 of 1908.