| மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் | மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் | | அங்கம்எலாம் குறைந்துஅழுகு தொழுநோ யராய் | ஆவுரித்துத் தின்றுஉழலும் புலைய ரேனும் | | கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் | அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவு ளாரே. | (தி.6 ப.95 பா.10) |
சூலைதீர்த்து ஆட்கொண்டார்: "முடிகொண்டார்" எனத்தொடங்கும் தனித்திருத்தாண்டகப் பாடலில் திருமாலை இடப்பாகத்தில் பொருந்துமாறு பெருமான் கொண்டார் என்பதையும், அப்பரைச் சூலை தீர்த்து ஆட்கொண்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்பாடற்பகுதி காண்க. "மாலை இடப்பாகத்தே மருவக்கொண்டார்." "சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே" (தி.6 ப.96 பா.3) இப்பதிகத்துள், "சுந்தரனைத் துணைக்கவரி வீசக்கொண்டார்" (தி.6 ப.96 பா.3) என வருகிறது. இதற்கு, ஆலாலசுந்தரராகப் பணி செய்த சுந்தரரையே இது குறிப்பதாகக் கொள்ளவேண்டும்."சமண்தீர்த்தென்றன்னை ஆட்கொண்டார் தாமே" என்ற அகச்சான்றும் இப்பதிக ஐந்தாம் பாடலில் வருகிறது. ஆறாம்பாடலில், "உடல் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே" (தி.6 ப.96 பா.6) என்றும் சூலை தீர்த்தாட் கொண்டமையை வேறொருவகையால் குறிப்பிட்டுள்ளார், பதினொன்றாம் பாடலில் "குடமுழநந்தீசனை வாசகனாக் கொண்டார்" என அறிவித்துள்ளார். இதற்கு மணிவாசகர் எனப் பொருள் கொள்கின்றனர். இதுபொருந்தாது. குடமுழவை வாசிப்பவன் "வாணன்" என்பவன். அவனே அன்றிநந்தீசனும் குடமுழவு வாசிப்பது உண்டு. வாசகன் என்றால் வாசிப்பவன் எனவேஇங்குப் பொருள் கொள்ள வேண்டும். நந்தீசனைக் குடமுழாவாசிப்பவனாகக் கொண்டார் என்பதே உண்மைப் பொருள். எழுதிக்காட்ட ஒண்ணாது: சிவபெருமான் அம்மை அப்பராகிய இருதன்மைப்பட்ட ஒரு பொருளாகவே இருப்பவர். ஒருவனே தேவன் என்பதே அவர் இயல்பு. அவனை யார்,யார், எங்கெங்கு, எவ்வண்ணத்தில் கண்டாலும், அங்கங்கு, அவ்வண்ணத்தில், அவ்வவ்வடிவாய்க் காட்சியளிப்பார். இப்படித்தான் இருப்பான் நம் சிவன்என்று எழுதிக் காட்ட முடியாது. அப்பரம்பொருளின் அருளையே கண்ணாகக் கொண்டுகண்டால் அவரது உண்மையை நாம் உணரலாகும். அதற்கும் அவனருள் நமக்கு வேண்டும்.அதனையே திருவாரூர்த் தாண்டகத்தில் "நின்அருட் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே"
|