பக்கம் எண் :

367
 
2091.கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்

கனவயிரக் குன்றனைய காட்சி யானை

அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை

அருமறையோ டாறங்க மாயி னானைச்

சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்

சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க

பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6


துணைவர்.பற்று - செல்வம். வான்புலன் - பெரிய புலன்களின் மேற்செல்லும் மனம். புலன்கட்குப் பெருமை கடக்கலாகாமை. தன்னைப் பொதுநீக்கி 'நினையவல்லார்க்கு' என மாற்றியுரைக்க. பொது நீக்கி நினைதலாவது, கடவுளர் பலருள் ஒருவனாக நினையாது, அவர் எல்லார்க்கும் தலைவனாக நினைதல். மெய்யுணர்வு வாய்க்கப் பெற்றார்க்கன்றி அது கூடாமையின், 'வல்லோர்க்கு' என்று அருளிச் செய்தார். பெருந்துணை - யாதொன்றற்கும் வேறு துணை நாட வேண்டாது, எல்லாவற்றிற்கும் யாண்டும் உடனாய் நின்று உதவும் துணை. இறைவன் அத்தகையோனாதலை, அமணர் இழைத்த தீங்குகள் பலவற்றினும் நாவரசர் கண்டருளினமையை நினைவு கூர்க.

6. பொ-ரை: கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன். மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன். அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான். நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான். வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன். ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன். வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

கு-ரை: வெண்ணீற்றுப் பூச்சில் ஈடுபட்டு. "கனவயிரக் குன்றனைய காட்சியானை" என்றருளிச் செய்தார். திருவாரூரிற் காணவேண்டும் உணர்வுண்டாயினமை, "ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை" என்றருளியதனாற் பெறுதும். பிற இடங்களினும் இவ்வாறே, பின்னர்க் காணுமதனையேனும், முன்னர்க் கண்டதனையேனும், அவ்விடங்களில் இறைவர் செய்த அருட்செயல்களையேனும் நினைந்து