பக்கம் எண் :

43
 

இன்னோரன்ன பொருட்சிறப்புடைய இத்திருமுறை, தருமை ஆதீன வெளியீடாக ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் அருளாட்சிக் காலத்தில் (1963)ஆதீனப் புலவர் மாகவித்துவான் திரு. சி. அருணை வடிவேலு முதலியார் எழுதிய விளக்கக் குறிப்புரையோடு வெளி வந்தது.

இதுபோது 26 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் வெள்ளிவிழா நினைவாக, ஒளியச்சில் பன்னிரு திருமுறைகளையும் ஒருசேர வெளியிடும் திட்டத்தில், பழைய விளக்கக் குறிப்புரையோடு, பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர் அவர்கள் எழுதிய பொழிப்புரையுடன் இத்திருமுறையை வெளியிட்டருள்கிறார்கள்.

இந்நூலை வெளியிட அறக்கொடை வழங்கியவர், மலேசியா, கோலாலம்பூர் சைவப்பெரியார், சிவநெறிச்செம்மல் திரு. அ. ஆறுமுகம் அவர்கள் ஆவார்.

இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் இத்திருமுறையைப் பொருளுணர்ந்து ஓதி இறைவன் திருவருள் பெற்று இன்புறுவார்களாக.

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
உத்தரவுப்படி,

அருள்மிகு தர்ப்பாரணியேஸ்வரர்
தேவஸ்தானம், திருநள்ளாறு

கந்தசாமித் தம்பிரான்
கட்டளை விசாரணை