பக்கம் எண் :

51
 

இல்லை. இந்த நுட்பம் சிந்தித்தால் தான் விளங்குவதாகும். இந்த நுட்பம் இயற்கையின் அழகுக் கூத்தை மெய்ம்மறந்து சுவைத்துக் களி வெறிகொள்ளும் கலைஞர்களுக்குத் தனிச்சிறப்பாக உள்ளது.

கவிதையநுபவம்:

அழகை மட்டுமின்றி உலகத் துயரங்களையும் கவிஞன் காணாமல் இல்லை; அவற்றையும் படம்பிடித்துக்காட்ட அவன் தவறவில்லை. ஆனால் கவிதையில் அத்துன்பங்களை மிகவும் விரும்புகின்றோம் நாம்; உலகியலில் துன்பங்களை வெறுத்தொதுக்கும் நம்மைக் கலைத் துறை அவலங்கள் கவர்ந்து விடுகின்றன. கலைத்துறைத் துன்பங் களைக் கண்டு கண்ணீர் விடுகின்றோம்; ஆனால் இக்கண்ணீரை நாம் விரும்புகின்றோம்.

நுட்பமான உணர்ச்சிகளைத் தூண்டும் சொல்லாட்சி, கற்பனை அமைப்புடைய கவிதைகளை உருவாக்கி நம்மைத் தன்வயப்படுத்தி விடுகின்றான் கவிஞன், இவ்வாறு நம் உணர்ச்சி யோடு ஒன்றுபடும் கவிதைச் செல்வத்தை நாம் வாழ்வில் இடையறாது சுவைத்தல் வேண்டும்.

உயர்ந்த கவிஞர்கள் கைம்மாறு கருதியா கவிதைகளை யாத்துள்ளார்கள்? தம் அநுபவத்தை எடுத்துக் கைம்மாறு வேண்டாக் கார்மழைபோல் பொழிந்து உள்ளார்கள். சுவைக்கும் உள்ளத்துடன் -இலக்கியப் பசியுடன் - அவர்களை அணுகுதல் ஒன்றே நாம் செய்யவேண்டுவது. அணுகிவிட்டால் நம்மை அவர்கள் ஆட்கொண்டு விடுகின்றார்கள். வேறு உலகுக்கு -கவியுலகுக்கு அழைத்துச் சென்று பலப்பல காட்சிகளைக் காட்டிக் களிப்பிக்கின்றார்கள்.

உலகியல் மறந்து அவ்வின்பக்காட்சியில், காலம், இடம், முதலிய வேற்றுமைகளையிழந்து கிடக்கின்றோம் நாம். ஆம்; கவிதை அநுபவம் இதுவேயாகும்.

1"கவிஞனுடைய கண், விண்ணுக்கும் மண்ணுக்கும்,மண்ணுக்கும்


1 "The Poet's eye, in a fine frenzy rolling, doth glance from heaven to earth, fromearth to heaven, and as imagination bodies forth, the forms of things unknown, the Poet's pen turns them to shapes, andgives to airy nothing a local habitation and a name".

-Shakespeare.