7. காப்புத் திருத்தாண்டகம்: ஏழாவதாக, "காப்புத் திருத்தாண்டகம்" திருவதிகைவீரட்டம் முதலாக உள்ள தலங்கள் அனைத்தும் நமக்குக் காப்புக்களாக உள்ளனஎன்ற குறிப்பில் இதற்கு இப்பெயர் இட்டுள்ளனர். முன் ஏழில் முதல் இரண்டு தில்லையைப் பற்றியன. ஏனையஐந்தும் திருவதிகையைப் பற்றியன. மற்றைய திருத்தாண்டகப் பதிகங்கட்குஇதுபோன்ற சிறப்புப் பெயர் கொடுக்கப்பெறவில்லை. இவை முன் ஏழுதிருப்பதிகங்களைப் பற்றியன. 70, 71, 93, 94, 95, 96, 97, 98 ஆகிய எட்டும் சிறப்புப்பெயர் பெற்ற, பின் எட்டுப் பதிகங்களாம். பின் எட்டும் பொதுப்பதிகங்கள் 70ஆம் பதிகம்: 1. "க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம்".திருக்கயிலாயமே சிவபெருமான் எழுந்தருளியுள்ள முதன்மைத் தலமாகும். பெருமான்அங்கிருந்தே எல்லாத் திருத்தலங்களிலும் ஒவ்வொரு காரணம் பற்றிஎழுந்தருளியுள்ளார். ஆதலால், தில்லைச் சிற்றம்பலம் முதலாக எல்லாத்தலங்களிலும் கயிலாய நாதனையே காணலாம் என்று அருளியுள்ளார். தலங்கள்பலவாயினும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் ஒருவனே. அவன் கயிலாயநாதனே என்றுஅருளியுள்ளமை நன்கு அறியத்தக்கது. கடவுள் ஒருவரே என்பதைச் சைவம் இதனாலும்தெளிவுறுத்துவது காணலாம். 71 ஆம் பதிகம்: 2. "அடைவுத்திருத்தாண்டகம்". பள்ளி எனவருந்தலங்களையும், வீரட்டானம், காடு, துறை, குடி, கோயில், ஊர் எனவருந்தலங்களையும் ஒவ்வொரு பகுதியாக அடைவு செய்து பாடியிருத்தலின்இப்பதிகம் அடைவுத் திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது. அடங்கல் -அடைவு என்பன ஒருபொருட் சொற்களே. 93 ஆம் பதிகம்: 3. "பல வகைத்திருத்தாண்டகம்". பூந்துருத்தி,நெய்த்தானம், ஐயாறு, சோற்றுத்துறை, திருப்பழனம் முதலாய பல தலங்களின்பெயர்களைச் சொல்வீரானால் பழவினைபோகும். துயர் நீங்கித் தூயநெறியில் சேரலாம். கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாம்,வீடாதவல்வினை வீட்டலாம், எனப் பலதலவழிபாட்டின் பலன் கூறலால்இப்பதிகம் பலவகைத் திருத்தாண்டகம் எனப் போற்றப்பெறுகிறது. 94 ஆம் பதிகம்: 4. "நின்றதிருத்தாண்டகம்". குறிகளும், அடையாளமும்,கோயிலும்,
|