நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் என்று அப்பர் ஐந்தாம்திருமுறையில் அருளியவாறு பெருமான் எப்படியெல்லாம் நின்று அருள் செய்கிறார்என்று அவர் நின்ற தன்மைகளைப் பலபடியாக இப்பதிகம் எடுத்துரைத்தலின்இப்பதிகம் நின்ற திருத்தாண்டகம் எனப் போற்றப்பெறுகிறது."நெருநலையாய், இன்றாகி, நாளையாகி, நிமிர் புன்சடைஅடிகள் நின்றவாறே" (தி.6 ப.94 பா.1) என்பது எடுத்துக்காட்டு. 95 ஆம் பதிகம்: 5. "தனித்திருத்தாண்டகம்". அப்பன் நீ, அம்மை நீஎனத் தொடங்குவது. சிவபெருமானின் முழுமுதல் தன்மையாகிய தனித்தன்மைபேசப்பெறுதலால் இப்பெயர் பெற்றது எனலாம். 96 ஆம் பதிகம்: 6. இதுவும் "தனித்திருத்தாண்டகம்". அப்பர் அடிகள்எப்படியெல்லாம் தன்னை இறைவன் ஆட்கொண்டான் என்ற தனித்தன்மைகளைவிளக்கிப் பாடுதலால் இதுவும் தனித்திருத்தாண்டகம் எனப்போற்றப்பெறுகிறது. "சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே"; "சமண்தீர்த்து என்றன்னை ஆட்கொண்டாரே"; "உடல் உறுநோய் தீர்த்தென்னைஆட்கொண்டாரே"; "வெந்துயரம் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே";"இடர் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே" என்பன அப்பரின்வரலாறு கூறும் அகச்சான்றுகளாகத் திகழ்கின்றன. 97 ஆம் பதிகம்: 7. "திருவினாத்திருத்தாண்டகம்". அண்டம் கடந்தசுவடும் உண்டோ? என்பது போன்ற வினாக்களாகவே ஐந்து பாடல்கள்காணப்படுதலால் இப்பதிகம் இப்பெயர் பெற்றது. மற்ற ஆறுபாடல்களும்பெருமானின் பெருமைகளைக் கண்டேன், என்றே குறிப்பிட்டுள்ளார். 98 ஆம் பதிகம்: 8. "மறுமாற்றத் திருத்தாண்டகம்". சமணத்தினின்றும்சைவம் சார்ந்த நாவுக்கரசரை, பல்லவ மன்னன் சமணர் துர்ப்போதனையால்தண்டிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவலரை அனுப்பி அழைத்தபோது,அவர்கட்கு மறுமொழியாக அருளியதே மறுமாற்றத்திருத்தாண்டகம். முடிமன்னனைஎதிர்த்து மறுமொழி சொன்ன மாண்பை இப்பதிகத்துட் பரக்கக் காணலாம்.மன்னன் முன்பு செல்லாமலேயே அப்பர் இருந்திருப்பார். ஏவலர்கள் மீது வைத்தகருணையால் அவர்கள் துன்புறாவண்ணம் மன்னன் எதிர் சென்றார்."நாமார்க்கும் குடியல்லோம்"; "பாராண்டு பகடேறி வருவார்சொல்லும், பணிகேட்கக் கடவோமோ, பற்றற்றோமே, புண்ணியனை நண்ணியபுண்ணியத்துளோமே";
|